IND vs AUS 2nd Test : "ஆதி டா.. காசிமேடு ஆதி.. "பழைய ரெக்கார்ட்சை எடுத்து பாருங்க! இந்தியாவை சம்பவம் செய்த ஸ்டார்க்
Mitchell Starc :இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் பேட்டிங்கை நிலைக்குலைய வைத்தார்.
பகலிரவு டெஸ்ட்:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா ஆகியோர் ஆடமாலேயே இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி இருந்தது.
இதையும் படிங்க: Watch Video: வந்தான்.. போனான்.. ரிப்பீட்டு! அவுட்டான ராகுல்.. உள்ளே வந்த கோலி! அடுத்து நடந்த டிவிஸ்ட்
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. படிக்கல்.ஜூரல், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக கேப்டன் ரோகித் சர்மா, ரவி அஷ்வின், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
மிரட்டிய ஸ்டார்க்:
போட்டியின் முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் எல்.பி. டபிள்யூ ஆனார். இதற்கு முன்னர் ஆஷஸ் தொடரில் இதே மைதானத்தில் இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸை முதல் பந்திலேயே அவுட்டாகி இருந்தார். அதன் பின்னர் மீண்டும் அவ்வாறு செய்தார். இதன்பிறகு கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் இந்திய அணிக்கு நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர், ஸ்கோர் 69 ரன்களை கடந்த போது மீண்டும் பந்து வீச வந்த ஸ்டார்க் ராகுல், விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை கழற்றி எடுத்தார்.
MITCHELL STARC IN THE FIRST BALL OF THE TEST 🔥⚡ pic.twitter.com/TxrDnSumb3
— Johns. (@CricCrazyJohns) December 6, 2024
அதன் பின்னர் சிறப்பாக ஆடிய ரவி அஷ்வினை 22 ரன்களில் தனது தந்திரமான யார்க்கரின் மூலம் விக்கெட் எடுத்து அசத்தினார். இறுதியில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க முக்கிய காரணமாக இருந்தார்.
The inswinging peach of a yorker gets Mitchell Starc his fifth wicket!#AUSvIND | #DeliveredWithSpeed | @NBN_Australia pic.twitter.com/SwVIHFiNhK — cricket.com.au (@cricketcomau) December 6, 2024
கடந்த போட்டியில் ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிடம் ரொம்ப மெதுவா பந்து வீசுறீங்க என்று வம்பிழுத்த நிலையில் அதற்கு தனது பந்து வீச்சின் மூலம் மிட்செல் ஸ்டார்க் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.