IND vs AUS 2nd Test: ஷமி, அஸ்வின், ஜடேஜா மிரட்டல்..! 263 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா..!
IND vs AUS 2nd Test: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இதில் முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்றது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி, 17) இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆகியுள்ளது. இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், அஸ்வின் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸை டேவிட் வார்னர் மற்றும் ஹவாஜா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் நிதானமாக ஆடிவந்த நிலையில், அணியின் ஸ்கோர் 50 ரன்களாக இருந்தபோது, டேவிட் வார்னர், 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 91 ரன்களாக இருந்த போது, லேபஸ்சேஞ்ஜிங் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அவுட் ஆகினர். இதில் ஸ்டீவ் ஸிம்த் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய ஹெட் நிதானமாகவே ஆடிவந்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் கே.எல். ராகுலிடம் கேட்ச் ஆகி 12 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்து வந்தாலும், தொடக்கத்தில் களமிறங்கிய ஹவாஜா மட்டும் அரைசதம் கடந்து நிதனமாக ஆடி ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் ஆடிவந்தார். ஆனால் இவரும் அணியின் ஸ்கோர் 167 ரன்களாக இருந்த போது ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் அவுட் ஆனார். இவர் 125 பந்துகளில் 12 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 81 ரன்கள் விளாசி இருந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் ஹேரி ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் ஹேண்ட்ஸ்க்கோப் மட்டும் குறிப்பிடும் படியாக 72 ரன்கள் எடுத்து இருந்தார். இவர் மட்டும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து, 263 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணியின் சார்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு சுழற்பந்து வீச்சு தான் காராணமாக இருந்தது. அதே நிலை இரண்டாவது போட்டியிலும் தொடர்கிறது.
அதன் பின்னர் களமிறங்கிய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து உள்ளது. களத்தில் ரோகித் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.