IND vs AUS 2nd Test, LIVE Score: ஆஸ்திரேலியாவை கதறவிட்டு வெற்றியை தூக்கி சாப்பிட்ட இந்தியா...!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் அறிய ABP நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Background
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரலையில் காணலாம்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிபெற ஆஸ்திரேலிய அணியும் முனைப்பு காட்டி வருகிறது.
இந்திய அணி:
முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்த போட்டியிலும், ஆஸ்திரேலிய அணியை மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும், ஜடேஜா, அக்சர் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணிக்கு உறுதுணையாக உள்ளனர். கடந்த போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா, தனது நல்ல ஃபார்மை தொடர்கிறார். கோலி, புஜாரா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் எதிரணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். புஜாராவிற்கு இது 100வது டெஸ்ட் போட்டி ஆகும். தொடர்ந்து சொதப்பி வரும் துணை கேப்டன் கே.எல். ராகுலுக்கு பதிலாக, இளம் வீரர் சுப்மன் கில்லிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய அணி:
கடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே ஆஸ்திரேலிய அணியால் சோபிக்க முடியவில்லை. இதன் காரணமாக, வார்னர், லபுசக்னே, ஸ்மித் மற்றும் கவாஜா ஆகியோர் இந்த போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியில் களமிறங்குவது ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. தனது அறிமுகப் போட்டியிலேயே இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த, சுழற்பந்துவீச்சாளர் மார்பி இந்த போட்டியிலும் கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெட் டு ஹெட்:
இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 104 முறை டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31 முறை இந்திய அணியும், 43 முறை ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 28 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இந்திய உத்தேச அணி:
ரோஹித் சர்மா(கே), புஜாரா , விராட் கோலி , ஸ்ட்ரேயாஸ் , கேஎல் ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின் , அக்சர் படேல் , ஜடேஜா , கேஎஸ் பாரத் , முகமது சிராஜ் , ஷமி
ஆஸ்திரேலிய உத்தேச அணி:
ஸ்டீவ் ஸ்மித் , மார்னஸ் லபுசக்னே , டேவிட் வார்னர் , உஸ்மான் கவாஜா , டிஎம் ஹெட் , கேரி , பாட் கம்மின்ஸ்(கே), நாதன் லயன் , மிட்செல் ஸ்டார்க் , போலண்ட், மார்பி
ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் தோல்வி..! மிரட்டல் வெற்றி பெற்ற இந்தியா..!
115 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4வது விக்கெட்டை இழந்த இந்தியா..! வெற்றிக்கு இன்னும் 27 ரன்களே தேவை..!
இந்திய அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த விராட்கோலி அவுட்
அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த விராட்கோலி ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
அதிவேகமாக 25 ஆயிரம் ரன்கள்..! புதிய வரலாறு படைத்த கோலி
இந்திய அணியின் வீரர் விராட்கோலி இந்த போட்டியில் மூன்று வடிவ போட்டிகளிலும் சேர்த்து அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதிரடி காட்டிய ரோகித்சர்மா ரன் அவுட் - இந்திய ரசிகர்கள் சோகம்
இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித்சர்மா 31 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.