IND vs AFG Weather: இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டிக்கு நடுவே குறுக்கே வருமாம் மழை.. வெளியான வானிலை அறிக்கை..!
டி20 உலகக் கோப்பை 2024ன் சூப்பர் 8 சுற்றின் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான இன்றைய போட்டியும் மழையால் கைவிடப்படுமா..? என்பதை இங்கே பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை 2024ன் 43வது போட்டியில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறுகிறது. சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும். பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியானது உள்ளூர் நேரப்படி இந்தப் போட்டி காலை 10.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கும் ஆட்டம் தொடங்குகிறது.
குரூப் சுற்று போட்டியில் கனடாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருந்தது. அந்த போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான இன்றைய போட்டியும் மழையால் கைவிடப்படுமா..? என்பதை இங்கே பார்க்கலாம்.
Who will win today's match between Afghanistan and India.? #IndvsAfg #T20WorldCup pic.twitter.com/YH2ncp3Re5
— S I D (@iMSIDPAK) June 20, 2024
பார்படாஸில் வானிலை எப்படி இருக்கிறது..?
weather.com இன் படி , பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆனால், போட்டியின் போது அதாவது காலை 10 மணி அளவில் மழை பெய்ய வாய்ப்பு 10 முதல் 20 சதவீதம் மட்டுமே. இருப்பினும், இந்த வாய்ப்பு 1 மணிக்கு 50 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் எந்த இடையூறும் இல்லாமல் முழு போட்டியையும் பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. போட்டியின் போது வெப்பநிலை 27 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இருப்பினும் இப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் இப்போது சுவாரஸ்யம்.
ஏற்கனவே ஒரு போட்டி மழையால் ரத்து:
பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதாவது, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டது. இந்த போட்டியில் இரண்டு முறை மழை பெய்தது. இரண்டாவது முறையாக மழை பெய்ததால் போட்டியை மீண்டும் தொடங்க முடியவில்லை. இதுபோல், இன்று நடைபெறவுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியும் மழையால் கைவிடப்படுமோ என்ற அச்சத்தில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
குரூப் ஸ்டேஜில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மிரட்டல்:
2024 டி20 உலகக் கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் இந்தியாவும், ஆப்கானிஸ்தான் அணியும் அற்புதமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தியது. எனினும், கனடாவுக்கு எதிரான இந்திய அணியின் நான்காவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவதாக, ஆப்கானிஸ்தான் முதல் மூன்று போட்டிகளில் உகாண்டா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியாவை தோற்கடித்தது. ஆனால், கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
இந்தியா : ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் , சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்
ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், ரஷீத் கான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி