ICC World Cup Point Table 2023: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா! புள்ளி பட்டியலில் எத்தனையாவது இடம்?
ICC World Cup Point Table 2023: புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது.
13 வது ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.
10 அணிகள் விளையாடும் இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அதேபோல், அடுத்தடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் இருக்கிறது. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்.
இந்தியா வெற்றி:
இன்று (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 5 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் உள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்தவகையில், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவன் ஸ்மித் 71 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் மொத்தம் 46 ரன்கள் எடுத்தார். அதேபோல் மற்றொரு வீரரான டேவிட் வார்னர், 52 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
இதில் இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சுழலால் மிரட்டினார். அந்த வகையில், அவர் வீசிய 10 ஓவர்களில் 2 ஓவர்கள் மெய்டன் செய்து 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதில் மொத்தம் 3 விக்கெட்டுகள் அடக்கம்.
இச்சூழலில், 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. அதன்படி, இந்திய் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இஷான் கிஷன் கோல்டன் டக்- அவுட் ஆனார். அதேபோல் கேப்டன் ரோகித் சர்மாவும் எல்.பி.டபுள்யூ ஆகி டக்- அவுட் முறையில் நடையைக்கட்டினார்.
அடுத்ததாக வந்த ஷ்ரேயஸ் அய்யரும் டக்-அவுட் ஆகி வெளியேற ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் விராட் கோலி அதிரடியாக விளையாடி 115 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 85 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
கே.எல்.ராகுல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கடைசி வரை களத்தில் நின்று அணிக்கி வெற்றியை தேடித் தந்தார். அதன்படி, 115 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 97 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 8 பந்துகள் விளையாடி வெற்றிக்கான ரன்னை சிக்ஸர் மூலம் பெற்றுத்தந்தார். அதன்படி, இந்திய அணி 41.2 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதன்படி, உலகக்கோப்பை தொடரின் 5 லீக் போட்டிகள் முடிவின் படி புள்ளிப்பட்டியலை கீழே காணலாம்.
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ரன் ரேட் |
நியூசிலாந்து | 1 | 1 | 0 | 2 | +2.149 |
தென் ஆப்பிரிக்கா | 1 | 1 | 0 | 2 | +2.040 |
பாகிஸ்தான் | 1 | 1 | 0 | 2 | +1.620 |
வங்கதேசம் | 1 | 1 | 0 | 2 | +1.438 |
இந்தியா | 1 | 1 | 0 | 2 | +0.883 |
ஆஸ்திரேலியா | 1 | 0 | 1 | 0 | -0.883 |
ஆப்கானிஸ்தான் | 1 | 0 | 1 | 0 | -1.438 |
நெதர்லாந்து | 1 | 0 | 1 | 0 | -1.620 |
இலங்கை | 1 | 0 | 1 | 0 | -2.040 |
இங்கிலாந்து | 1 | 0 | 1 | 0 | -2.149 |
மேலும் படிக்க: ODI World Cup 2023: தொடக்க வீரர்கள் டக்-அவுட்; 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான சாதனை - ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும் படிக்க: ODI World Cup 2023: அதிக விக்கெட்டுகள்; ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஜடேஜா படைத்த சாதனை