ODI World Cup 2023: அதிக விக்கெட்டுகள்; ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஜடேஜா படைத்த சாதனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியதில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார் ரவீந்திர ஜடேஜா.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிது. இதில் நான்கு லீக் போட்டிகள் முடிந்து 5 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
200 ரன்கள் டார்கெட்:
அதன்படி இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்தவகையில், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவன் ஸ்மித் 71 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் மொத்தம் 46 ரன்கள் எடுத்தார். அதேபோல் மற்றொரு வீரரான டேவிட் வார்னர், 52 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். தற்போது இந்திய அணி 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
மிரட்டிய ஜடேஜா:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சுழலால் மிரட்டினார். அந்த வகையில், அவர் வீசிய 10 ஓவர்களில் 2 ஓவர்கள் மெய்டன் செய்து 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதில் மொத்தம் 3 விக்கெட்டுகள் அடக்கம்.
அந்த மூன்று விக்கெட்டுகளை முதலில் வீசிய பத்து பந்துகளில் காலி செய்தார். இவ்வாறாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும், ஸ்மித், லபுஷேன் மற்றும் அலெக்ஸ் கேரியை தன்னுடைய சுழலால் பெவிலியன் திரும்ப வைத்தார்.
புதிய சாதனை:
இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் எடுத்தன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார். அந்த வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது வீரராக இணைந்திருக்கிறார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் விளையாடிய 40 ஒரு நாள் போட்டிகளில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக:
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் 128 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர், ஸ்டூவர்ட் பிராட் முதல் இடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 37 போட்டிகள் விளையாடி 105 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
தற்போது இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக இணைந்துள்ள ஜடேஜாவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளபங்கங்களில் வாழ்த்தி வருகின்றனர். அதேநேரம் இன்றைய போட்டியில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: Rashid Khan: நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்; சம்பளத்தை அள்ளிக்கொடுத்த ரஷீத்கான்!
மேலும் படிக்க: ODI WC 2023: வந்துட்டான்ய்யா...வந்துட்டான்ய்யா...மைதானத்திற்குள் நுழைந்த ஆசாமி! விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்!