ICC U-19 T20 World Cup 2023: அண்டர் 19 உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா இருக்கும்... சச்சின் கொடுத்த நம்பிக்கை..!
ICC U-19 T20 World Cup 2023: இந்திய பெண்கள் U-19 அணி உலகக் கோப்பையின் சிறந்த அணிகளில் ஒன்றாக செயல்படக்கூடும் என்று முன்னாள் இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய பெண்கள் U-19 அணி 2023 ICC U-19 T20 உலகக் கோப்பையின் சிறந்த அணிகளில் ஒன்றாக செயல்படக்கூடும் என்று முன்னாள் இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சனிக்கிழமை அதாவது இன்று (14/01/2023) தொடங்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிகழ்வில் போட்டியிடும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஷஃபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பெண்கள் அணி குறித்து சச்சின் தெண்டுல்கர் மேலும் கூறுகையில், " நமது பெண்கள் அணியைப் பொறுத்தவரையில் இந்த முறை தனித்து நிற்கும் அணிகளில் ஒன்றாக இருக்கக் கூடிய பலம் வாய்ந்த அணியாக இந்திய பெண்கள் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சில அனுபவமிக்க வீராங்கனைகள் மற்றும் இளம் திறமையான வீராங்கனைகளும் கொண்ட அணியாக இந்திய அணி நல்ல வழுவான அணியாக உள்ளது" என்று சச்சின் ஐசிசியிடம் தெரிவித்துள்ளார். மொத்தம் 41 ஆட்டங்கள் கொண்ட இந்த 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெறும் அணிகள் மட்டும் 16. மொத்தம் 16 அணிகள் போட்டியிடும் நிலையில், ஐசிசி போட்டி பெண்கள் கிரிக்கெட் நிலப்பரப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டெண்டுல்கர் கூறியுள்ளார்.
The Women's #U19T20WorldCup kicks off tomorrow in South Africa 🤩
— ICC (@ICC) January 13, 2023
Here's how to watch the tournament live and other details from the inaugural edition 👇https://t.co/sHiwdXGWhf
"19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியானது நிறைய எதிர்பார்ப்புகளுடன் கூடிய முதல் நிகழ்வாகும். இது வீராங்கனைகளுக்கு விளையாட்டில் நிலைத்து நின்று விளையாடும் நம்பிக்கையை அளிக்கும். ஏனெனில் உலகளாவிய அனுபவம் இளம் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த கற்றல் மற்றும் அனுபவத்தை உறுதி செய்யும். பெண்கள் கிரிக்கெட் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தாலும், இன்னும் சில பகுதிகள் முன்னேறாமல் உள்ளன. தற்போது, பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகளவில் மிகவும் வலுவான அடிமட்ட கட்டமைப்பு தேவைப்படுகிறது. கட்டமைப்பை எவ்வளவு பெரிய அளவில் பரப்புகிறோமோ, அவ்வளவு திறமையை வெளிக்கொணருவோம், இது விளையாட்டின் தரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றும் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
Sachin Tendulkar on how the first-ever ICC Women's #U19T20WorldCup will help the future superstars of cricket 🏆 pic.twitter.com/OE3ItnJJNS
— ICC (@ICC) January 14, 2023
"ஆரம்பப் போட்டி வீராங்கனைகளுக்கு நம்பிக்கையை உறுதி செய்யும். உலகின் மிகச்சிறந்த ஜூனியர் திறமைசாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதைத் தாண்டி, பல்வேறு நாடுகளில் ஜூனியர் கிரிக்கெட்டில் அதிக முதலீட்டை இந்த போட்டித் தொடர் உறுதி செய்யும், இதன் விளைவாக எதிர்கால U19 உலகக் கோப்பைகள் மற்றும் சீனியர் கிரிக்கெட்டுகளுக்கு நிலையான அனுபவம் கிடைக்கும்" எனவும் டெண்டுல்கர் கூறியுள்ளார்.