ICC T20 Ranking: தரவரிசையில் முன்னேறிய இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.. மாஸ் அப்டேட்ஸ்..
அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 22ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
![ICC T20 Ranking: தரவரிசையில் முன்னேறிய இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.. மாஸ் அப்டேட்ஸ்.. ICC T20I Rankings Alex Hales And Arshdeep Singh Big Gainers In Recent Updates ICC T20 Ranking: தரவரிசையில் முன்னேறிய இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.. மாஸ் அப்டேட்ஸ்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/19/23c7a881b257582308194f31c599a9291668831415263588_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 22ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் 54ஆவது இடத்திலிருந்து 32 இடங்கள் முன்னேறி 22 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் டாப் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 637 புள்ளிகளுடன் 14ஆவது இடத்திலும், 618 புள்ளிகளுடன் அஸ்வின் 21ஆவது இடத்திலும் உள்ளனர். அர்ஷ்தீப் சிங் 615 புள்ளிகளுடன் 22ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகள் நடந்து முடிந்ததை அடுத்து, புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
ஐசிசி பந்துவீச்சாளர் பட்டியலில் இலங்கை வீரர் வனின்டு ஹசரங்கா முதலிடத்தில் உள்ளார்.
ஆப்கன் வீரர் ரஷித் கான் இரண்டாவது இடத்திலும், உலகக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய அடில் ரஷித் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேப்டன் பட்லருடன் இணைந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி காண்பித்தார் அலெக்ஸ் ஹேல்ஸ். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 86 ரன்களை (7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட) விளாசினார்.
அவர் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 655 புள்ளிகளுடன் 12ஆவது இடத்திற்கு முன்னேறினார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 13ஆவது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பை தொடரில் அதிரடி காண்பித்த சூர்யகுமார் யாதவ் டி20 தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக உள்ளார்.
Power ranking of icc men's T20 WORLD CUP @iNaseemShah @WayneParnell @arshdeepsinghh @chriswoakes @iShaheenAfridi pic.twitter.com/QWX1uSqhva
— muzamil lone (@Imuzamil12) November 19, 2022
உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 11 ஆவது இடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவை தவிர முதல் டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்தவொரு இந்திய வீரரும் இல்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)