சீனியர் சிட்டிசன்களுக்கு கார் வாங்கனுமா? - பாதுகாப்பான 5 மாடல்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

மூத்த குடிமக்களுக்கான காரை வாங்கும்போது பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் வசதியான பயணத்திற்கான அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

நடைமுறைக்கு உகந்ததாகவும் , பாதுகாப்பானதாகவும் திகழும் மூத்த குடிமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாருதி சுசூகி டிசையர்:

ரூ.6.26 லட்சம் என்ற தொடக்க விலையில் க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. கூடுதலாக 6 ஏர் பேக்குகள், எரிபொருள் குறைந்தால் எச்சரிக்கை போன்ற அம்சங்களையும் பெற்றுள்ளது.

ஹுண்டாய் வென்யு:

ரூ.7.99 லட்சம் என்ற தொடக்க விலையில் ADAS பாதுகாப்பு அமைப்பு, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டர்ன் - பை - டர்ன் நேவிகேஷன், ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது

ஹோண்டா அமேஸ்:

ரூ.7.48 லட்சம் என்ற தொடக்க விலையில் உள்ளூர் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. ADAS, ஆட்டோ க்ராஷ் நோடிஃபிகேஷன் என 28க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர்

ரூ.10.99 லட்சம் என்ற தொடக்க விலையில் ஆறு ஏர் பேக்குகள், மோசமான விபத்துகளின்போது கூட முன்புற பயணிகளுக்கு நெஞ்சு பகுதியில் காயம் ஏற்படாதவாறு வலுவான & வசதியான இருக்கைகளை கொண்டுள்ளது.

ஹோண்டா சிட்டி

ரூ.11.95 லட்சம் என்ற தொடக்க விலையில் ஹோண்டா சென்சிங் ADAS தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இதில் வைட் ஏங்கில், லாங் ரேஜ்ச் கொண்ட முன்புற கேமராவை கொண்டு விபத்துகளுக்கான வாய்ப்பை குறைக்கிறது. இது போக லைவ் கார் லொகேஷனையும் கொண்டுள்ளது.