PAK vs NAM: நமிபியா போராட்டம் வீண் - அரை இறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான்
40 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம், 4/4 போட்டிகளிலும் வெற்றி பெற்று க்ரூப்:1-ல் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.
டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 12வது நாளான இன்று, இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அபு தாபி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில், வங்கதேசம் - தென்னாப்ரிக்கா மோதின. இதில், தென்னாப்ரிக்கா அணி வெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - நமிபியா அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. டாஸ் ஜெயித்து டிஃபெண்ட் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கியது. சொல்லி அடித்தது போல, இந்த போட்டியிலும் அதிரடி ஓப்பனிங் தந்தனர் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும். இதனால் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது பாகிஸ்தான். சமாளித்து பந்துவீசிய நமிபியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால், 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான்.
A blazing batting display from Pakistan helps them to a score of 189/2 🔥
— T20 World Cup (@T20WorldCup) November 2, 2021
Can Namibia chase this down?#T20WorldCup | #PAKvNAM | https://t.co/LOepIWiGnz pic.twitter.com/JeqLWQYbNK
கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய நமிபியா அணிக்கு, ஸ்டீபர்ன் பார்ட் (29), கிரேக் வில்லியம்ஸ் (40), டேவி வீஸ் (43*) ஆகியோர் ரன் சேர்த்தனர். இதனால், நமிபியா இலக்கை நெருங்கியது. ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ சண்டை செய்யனும் என்பதை உறுதி செய்த நமிபியா, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது நமிபியா அணி. எனினும் இலக்கை எட்ட தவறியதால், 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம், 4/4 போட்டிகளிலும் வெற்றி பெற்று க்ரூப்:1-ல் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.
Four matches. Four wins. Into the semis!#PAKvNAM | #T20WorldCup
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 2, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்