Ind vs Eng, 1 Innings Highlight: இந்தியாவிற்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து
ICC T20 WC 2021,Ind vs Eng: உலககோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலககோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிக்கான முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் வரும் 24-ந் தேதி நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
துபாயில் உள்ள ஐ.சி.சி. அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த பயிற்சி போட்டியில் இருந்தே முன்னாள் கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக களமிறங்கினார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஜேசன் ராயும், ஜோஸ் பட்லரும் அதிரடியாக ஆடினர்.
பட்லர் 3 பவுண்டரிகளுடன் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் போல்டாகினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜேசன் ராய் 17 ரன்களில் ஷமி பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய டேவிட் மலானும் 18 பந்தில் 18 ரன்கள் எடுத்து ராகுல் சாஹர் பந்தில் போல்டானார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜானி பார்ஸ்டோவும், லியாம் லிவிங்ஸ்டனும் இங்கிலாந்தில் ஸ்கோரை உயர்த்திவர், 20 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 30 ரன்க் எடுத்திருந்த நிலையில் லிவிங்ஸ்டன் ஷமி பந்தில் போல்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய மொயின் அலி இறந்தது முதல் அதிரடியில் ஈடுபட்டார். மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய பார்ஸ்டோ 36 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டானார்.
ஆனால், மறுமுனையில் மொயின் அலி பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். அவர் 20 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 43 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை எடுத்தது. மொயின் அலி 49 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியில் அஸ்வின் விக்கெட்டுகள் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் 4 ஓவர்கள் வீசி 23 ரன்களே விட்டுக்கொடுத்தார். முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியின் ஸ்விங் கிங் புவனேஷ்குமார் இந்த போட்டியில் மோசமான பந்துவீச்சு பார்மையே வெளிப்படுத்தினார். அவர் 4 ஓவர்கள் வீசி 3 வைடுகளுடன் 54 ரன்களை வாரி வழங்கினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்