ENG vs NZ, 1 Innings Highlight: இறுதிப்போட்டிக்கு செல்ல நியூசி.,க்கு 167 ரன்கள் தேவை
2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடித்த மொயின் அலி, 37 பந்துகளில் 51 ரன்கள் எடுக்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிந்து நாக்-அவுட் சுற்று இன்று தொடங்கி உள்ளது. முதல் அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 6வது ஓவரில் முதல் விக்கெட்டை இழக்க நேரிட்டது. மில்னே பந்துவீச்சில் ஓப்பனர் பேர்ஸ்டோ அவுட்டாக, டேவிட் மாலன் ஒன் - டவுன் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அவர், 41 ரன்கள் எடுத்தார். 9வது ஓவரில் பட்லர் பெவிலியன் திரும்ப, மொயின் அலி பேட்டிங் களமிறங்கினார். மாலனும், மொயின் அலியும் அதிரடியாக கூட்டணி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடித்த மொயின் அலி, 37 பந்துகளில் 51 ரன்கள் எடுக்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Nisha Dahiya Death: பிரதமர் வாழ்த்து தெரிவித்த வீராங்கனை இறந்ததாக பரவிய செய்தி: நடந்தது என்ன?
Have England got enough to reach the #T20WorldCup final?
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 10, 2021
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, சவுதி, மில்னே, சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து 166 ரன்கள் எடுத்தது. இறுதிப்போட்டிக்கு செல்ல நியூசிலாந்து 167 ரன்கள் தேவைப்படுகிறது. இதற்கு முன்பு, டி-20 உலகக்கோப்பையில் ஒரே ஒரு முறைதான் 140-க்கும் அதிகமான டார்கெட்டை நியூசிலாந்து சேஸ் செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றிகரமாக சேஸ் செய்தது. இந்நிலையில், இன்றைய போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்துள்ள டார்கெட்டை நியூசிலாந்து சேஸ் செய்யுமா என்பதை பார்ப்போம்.
Moeen Ali steps up with a semi-final half-century 💪#ENGvNZ | #T20WorldCup
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 10, 2021
TN Rain Update: வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாளை மாலை கரையை கடக்கும்!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்