ICC T20 Ranking: ஆறு டி20 போட்டிகள்.. அதிரடி ஆட்டம்..! தரவரிசையில் 168 இடங்கள் முன்னேறிய ஷுப்மன் கில்..!
ICC T20 Ranking: களமிறங்கிய ஆறு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில் 168 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 30-வது இடம் பிடித்துள்ளார்.

Surya continues to shine on the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings 🔥#ICCRankings | Details ⬇️https://t.co/APBgTrIHGO
— ICC (@ICC) February 1, 2023
An outrageous double hundred from Shubman Gill in Hyderabad 💥
— ICC (@ICC) January 18, 2023
A few incredible stats from the knock 👉 https://t.co/JgdSiZfaij#INDvNZ pic.twitter.com/ynfJezRaPX
கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய சுப்மன் கில், ஒரு போட்டியில் 45 ரன்களையும், மற்றொரு போட்டியில் அரைசதமும் விளாசினார். அதைதொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள்கொண்ட டி-தொடரில், சற்றும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆனால், ஒருநாள் தொடரின் போது, 70, 21 மற்றும் 116 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதைதொடர்ந்து நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களை ஆழ்த்தினார். முதல் போட்டியிலேயே 208 ரன்களை விளாசியதோடு, அடுத்த இரண்டு போட்டிகளிலும் முறையே 40 மற்றும் 112 ரன்களை சேர்த்தார். அதைதொடர்ந்து, டி-20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியின் போது அபாரமாக ஆடி, டி-20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
மூன்று மாதங்களில் அபாரம்:
கடந்த 3 மாதங்களில் மட்டும் டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சேர்த்து, 2 அரைசதங்கள், 3 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதத்தை சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில் பதிவு செய்துள்ளார். இளம் வயதில் 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும், சுப்மன் கில் படைத்துள்ளார். அடுத்தடுத்த சாதனைகள் மூலம் நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், சுப்மன் கில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். அதோடு, இந்திய அணியில் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் கவனம் பெற்றுள்ளர். ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டுள்ள கில், எதிர்காலத்தில் இந்திய அணியை வழிநடத்தவும் வாய்ப்புள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

