(Source: Poll of Polls)
India ODI WC 2023 Squad: உலகக்கோப்பைக்கான இந்திய அணி.. அறிவிக்க தயாரான பிசிசிஐ.. யாருக்கெல்லாம் இடம் தெரியுமா?
India ODI WC 2023 Squad: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கும் போட்டித் தொடர் என்றால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
India ODI WC 2023 Squad: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கும் போட்டித் தொடர் என்றால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காகத்தான். ஆசியக் கோப்பைக்காக விளையாடும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் என மொத்தம் 5 அணிகளும், இவை இல்லாமல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பைத் தொடர் இம்முறை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-உடன் இணைந்து நடத்தப்படுகிறது. இதற்காக இந்தியாவில் உள்ள 12 மைதானங்களில் ஏற்பாட்டு வேலைகளும் சீரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு மைதானத்திற்கும் தலா ரூ 50 கோடி ரூபாய் வீதம் பிசிசிஐ-ஆல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக 10 அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இந்தியா நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துடனும், நெதர்லாந்துடனும் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றது. பயிற்சி போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் விற்பனை தொடங்கிவிட்டது.
உலகக்கோப்பைக்கான அப்டேட்டுகள் அவ்வப்போது வந்து கொண்டு இருந்தாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர் பட்டாளமும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஷயம் என்றால் அது ஒவ்வொரு அணியும் எப்போது உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்யும் என்பது தான். இப்படி இருக்கும் போது, பிசிசிஐ இந்திய அணியை ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆசியக் கோப்பைக்கான அணியுடனே உலகக்கோப்பையிலும் களமிறங்கும் என கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் மற்றும் அக்சர் படேல்.