World Cup 2023 Trophy Tour: அடேங்கப்பா! விண்வெளியில் 1.2 லட்சம் அடி உயரத்தில் அறிமுகமான உலகக்கோப்பை..ஐசிசி அதிரடி
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான கோப்பையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம், விண்வெளியில் வைத்து அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான கோப்பையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம், விண்வெளியில் வைத்து அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
விண்வெளியில் உலகக்கோப்பை:
நடப்பாண்டு இறுதியில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு தொடருக்கான கோப்பை உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கான கோப்பையை, பூமியில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் வைத்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிமுகம் செய்துள்ளது. பெஸ்போக் ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனில் இணைக்கப்பட்டு இந்த கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து, அந்த கோப்பையானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தரையிறங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஐசிசியின் தலைமை செயலர் மற்றும் பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The #CWC23 Trophy in space 🌠🤩
— ICC (@ICC) June 26, 2023
The ICC Men's Cricket World Cup 2023 Trophy Tour is HERE 👉 https://t.co/UiuH0XAg1J pic.twitter.com/48tMi6cuHh
கோப்பையின் உலகச் சுற்றுப்பயணம்:
முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை உலகக்கோப்பையானது பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என்பது ரசிகர்களிடையே வெகுவாக சென்றடைவதோடு, அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும் என சர்வதேச கிரிகெட் சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சுற்றுப்பயண விவரம்:
ஜூன் 27 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை சுற்றுப்பயணமானது குவைத், பஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா மற்றும் தொடரை நடத்தும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 18 நாடுகளில் நடைபெற உள்ளது.
டிராபி சுற்றுப்பயணத்தின் முழு அட்டவணை:
27 ஜூன் - 14 ஜூலை: இந்தியா
15 - 16 ஜூலை: நியூசிலாந்து
17 - 18 ஜூலை: ஆஸ்திரேலியா
19 - 21 ஜூலை: பப்புவா நியூ கினியா
22 - 24 ஜூலை: இந்தியா
25 - 27 ஜூலை: அமெரிக்கா
28 - 30 ஜூலை: வெஸ்ட் இண்டீஸ்
31 ஜூலை - 4 ஆகஸ்ட்: பாகிஸ்தான்
5 - 6 ஆகஸ்ட்: இலங்கை
7 - 9 ஆகஸ்ட்: பங்களாதேஷ்
10 - 11 ஆகஸ்ட்: குவைத்
12 - 13 ஆகஸ்ட்: பஹ்ரைன்
14 - 15 ஆகஸ்ட்: இந்தியா
16 - 18 ஆகஸ்ட்: இத்தாலி
19 - 20 ஆகஸ்ட்: பிரான்ஸ்
21 - 24 ஆகஸ்ட்: இங்கிலாந்து
25 - 26 ஆகஸ்ட்: மலேசியா
27 - 28 ஆகஸ்ட்: உகாண்டா
29 - 30 ஆகஸ்ட்: நைஜீரியா
31 ஆகஸ்ட் - 3 செப்டம்பர்: தென்னாப்பிரிக்கா
செப்டம்பர் 4 முதல்: இந்தியா
உலகக்கோப்பை அட்டவணை:
நடப்பாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை ஜூன் 27-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நாளை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட உள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் என்றும், உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 31-ந் தேதி தொடங்கும் என்றும் வதந்திகள் பரவி வரும் நிலையில், நாளை வெளியாகும் அறிவிப்பின் அடிப்படையில் எப்போது உலகக்கோப்பை தொடர் தொடங்கும்? என்பது தெரிய வரும்.