T20 world cup prize: அரையிறுதியோடு திரும்பிய இந்தியாவுக்கும் பரிசுத்தொகை இருக்கிறதாம்… எவ்வளவு தெரியுமா?
இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து முற்றிலும் வெறுங்கையுடன் திரும்பவில்லை. இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதற்காக இந்திய அணி கணிசமான பரிசுத் தொகையைப் பெறும்.
இறுதிப்போட்டிக்கு செல்லமுடியாமல் அரையிறுதியோடு வெளியேறிய இந்திய அணிக்கும் பரிசுத்தொகை உண்டு. இந்திய அணி மட்டுமின்றி சூப்பர் 8 சுற்றில் இருந்த அனைத்து அணிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.
டி20 உலகக்கோப்பை 2022
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை போட்டியில், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்றதால், இந்திய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு செல்லாமல் தொடரைவிட்டு வெளியேறியது. இதனால் இம்முறையும் இந்திய அணியால் கோப்பை வெல்ல முடியாமல் போனது. அதன் படி அரையிறுதிகளில் வென்ற இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நாளை மோதவிருக்கின்றன. இந்திய அணி தொடரில் இருந்து அரையிறுதியோடு வெளியேற்றப்பட்ட போதிலும், இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து முற்றிலும் வெறுங்கையுடன் திரும்பவில்லை. இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதற்காக இந்திய அணி கணிசமான பரிசுத் தொகையைப் பெறும்.
வழக்கமாக அறிவிக்கப்படும் பரிசுத்தொகை
உலகக்கோப்பைகள் தொடங்கும் முன்னரே வெற்றி பெறும் அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை என்று அறிவிக்கப்படும். அதே போல இந்த உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்பும் அறிவிக்கப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தபடி, போட்டியின் வெற்றியாளருக்கு மொத்த பரிசுத் தொகை 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 0.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.
இந்தியாவுக்கு எவ்வளவு?
அந்தந்த போட்டிகளில் தோல்வியடைந்த இரண்டு அரையிறுதிப் போட்டியாளர்களைப் பொறுத்தவரை, பரிசுக்கான அர்ப்பணிக்கப்பட்ட பரிசுத் தொகை USD 400,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது, அதாவது 0.4 மில்லியன் அமெரிக்க டாலர். அரையிறுதியில் முன்னேறிய இந்திய அணிக்குக் கிடைக்கும் வெகுமதி இதுதான். சூப்பர் 12 கட்டத்தில் உள்ள மற்ற 8 அணிகளைப் பொறுத்தவரை, பரிசுத் தொகை தலா 70,000 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நடப்பு உலகக்கோப்பையில் பல அதிர்ச்சிகரமான முடிவுகளை பார்த்தோம்.
நாளை இறுதிப்போட்டி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நெதர்லாந்து வெற்றி ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. முன்னதாக குரூப் ஸ்டேஜில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து அணியும் கூட குரூப் ஸ்டேஜ் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதே இங்கிலாந்து அணிதான் அரையிறுதியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. பல அதிர்ச்சிகளை சந்தித்த உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி எவ்வளவு அதிர்ச்சிகளை வைத்துள்ளது என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.