Watch Video: கண்ணீர் விட்டு அழுத ஹர்மன் பிரீத்கவுர்..! கட்டியணைத்து ஆறுதல் கூறிய முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததால் கண்ணீர் விட்டு அழுத இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின.
173 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி தொடக்கத்திலே 3 விக்கெட்டுகளை இழந்தாலும், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆடிய ஆட்டம் இந்தியாவை வெற்றியின் அருகில் வரை அழைத்துச் சென்றது. வெற்றியின் அருகில் வரை சென்ற இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ரசிகர்களை வேதனையடைய வைத்தது.
ஆறுதல் கூறிய அஞ்சும் சோப்ரா:
இந்தியாவின் தோல்வி இந்திய ரசிகர்களையும், இந்திய வீராங்கனைகளையும் கண்ணீரில் ஆழ்த்தியது. இறுதிப்போட்டிக்கு செல்வதற்காக போராடிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மனம் உடைந்தார். அவருக்கு இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா மைதானத்திலே நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அஞ்சும் சோப்ராவை பார்த்ததும் அவரை கட்டியணைத்துக் கொண்ட ஹர்மன்பிரீத்கவுர் கண்ணீர்விட்டு உடைந்து அழுதார். அவரை அஞ்சும் சோப்ரா ஆறுதல் கூறி தேற்றினார். இந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. அப்போது, அஞ்சும்சோப்ரா பின்னால் நின்று கொண்டிருந்த ஹர்லீன் தியோல் ஹர்மன்பிரீத் கவுர் கண்ணீரைத் துடைத்தார்.
View this post on Instagram
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அஞ்சும் சோப்ரா, “ இந்தியா பலமுறை அரையிறுதிப் போட்டியில் ஆடியுள்ளது. ஆனால், அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஹர்மன்பிரீத் கவுர் இப்படி பேட் செய்வதை பார்ப்பது இது முதன்முறையல்ல. ஹர்மன்பிரீத்கவுர் காயம் மற்றும் உடல்நலத்துடன் போராடுவதை பார்த்திருக்கிறேன். இந்த போட்டியில் அவர் ஆடாமல் இருந்திருக்கலாம். ஆனால், அரையிறுதி என்பதாலும், அவர் ஹர்மன்பிரீத் கவுர் என்பதாலும் களமிறங்கினார். அவர் போட்டி முழுவதும் அதாவது 20 ஓவர் பீல்டிங் செய்தார். நான் ஹர்மன்பிரீத் கவுர் சோகத்தை குறைக்க முயற்சித்தேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத்:
173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 28 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர் – ஜெமிமா அதிரடியாக ஆடினர். ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில், தனி ஆளாக போராடிய ஹர்மன்பீரித் கவுர் 34 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் இந்திய அணி லீக்கில் இங்கிலாந்து மற்றும் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் மட்டுமே தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.