Hardik Pandya: ”என்னுடைய பதில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” - பிரதமருடன் உருக்கமாக பேசிய ஹர்திக் பாண்டியா!
என் மேல் வைக்கட்டப்பட்ட விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் இப்படி தான் பதில் சொல்ல வேண்டும் என அன்றே முடிவு செய்தேன் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.
என் மேல் வைக்கட்டப்பட்ட விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் இப்படி தான் பதில் சொல்ல வேண்டும் என அன்றே முடிவு செய்தேன் என்று பிரதமர் மோடி உடனான உரையாடலின் போது இந்திய அணி துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மனம் திறந்து பேசியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தென் ஆப்பிரிக்கவுடன் நடந்த இறுதி போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான், அதிலும் முக்கியமான அந்த இறுதி ஓவரை பாண்டியா வீசி டேவிட் மில்லரின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
நாடு திரும்பிய இந்திய அணி:
பார்படாஸில் வீசிய புயல் காரணமாக இந்திய அணியினர் நாடு திரும்ப சிறிது கால தாமதம் ஆனது.
இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற தனி விமானம் மூலம் இந்திய அணி நேற்று(04.07.2024) நாடு திரும்பியது.
நாடு திரும்பிய உடன் இந்திய அணியினர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர், அப்போது பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களுடன் உரையாடினர். அப்போது ஹர்திக் பாண்ட்டியாவிடம் பேசிய போது, பாண்ட்டியா தனது வாழ்க்கையில் கடந்த 6 மாதத்தில் நடந்தவற்றை பற்றி உருக்கமாக பேசினார்.
என்னை நான் பலப்படுத்தி கொண்டேன்:
என் வாழ்க்கையில் கடந்த 6 மாதங்கள் சிறந்த என்டர்டெய்ன்மெண்டாகவும், பல எற்ற இறக்கங்ளோடு இருந்தது. ரசிகர்களும் என்னை மைதானத்தில் வைத்து கிண்டல் செய்தனர், என் வாழ்க்கையில் சில மோசமான நிகழ்வுகளும் நடந்தது. இது எல்லாவற்றுக்கும் நான் பதில் கொடுக்க வேண்டும் என்றும் அது என் விளையாட்டு மூலமாக தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காக என்னையே நான் பலப்படுத்தி கொண்டு என்னை நன்றாக தயார்ப்படுத்தினேன். இது தான் என்னை கிண்டல் செய்தவர்களுக்கும் அவமானப்படுத்தியர்களுக்கும் சிறந்த பதிலாக இருக்கும் என்று நம்பினேன் என ஹர்திக் உருக்கமாக பேசினார்.