(Source: ECI/ABP News/ABP Majha)
அவரும் பிஸியாகிவிட்டார், நானும் பிஸியாகிவிட்டேன்… : தோனியுடன் பிரச்சனை என்ற வதந்தி குறித்து பேசிய ஹர்பஜன்!
"ஒருவர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திவிட்டு, அவருக்கு வாய்ப்பு கிடைக்காதபோது அல்லது வீழ்ச்சிக்கான காரணம் அவரிடம் சொல்லப்படாதபோது, பல கேள்விகள் மனதில் எழுகின்றன", என்றார்.
/.,,2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் இரு வீரர்களான எம்எஸ் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சில காலமாக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன, இது குறித்து மூத்த இந்திய பந்துவீச்சாளர் இப்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.
தோனி - ஹர்பஜன் கருத்துவேறுபாடா?
மஹிந்திர சிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்திகள் சில காலமாக ஊடகங்களில் பரவி வருகின்றன. இருவரும் நீண்ட காலமாக இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர், அவர்களின் புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையில் பல மறக்கமுடியாத வெற்றிகளை பெற்று தந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இணைந்து விளையாடி உள்ளனர். கேப்டன் தோனி பலமுறை இவருடைய தூஷ்ரா பந்தை கச்சிதமாக பயன்படுத்தி உள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பிரச்சனை என்று வதந்தி பரவி வந்த நிலையில், இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் தற்போது வதந்தியை அகற்றியுள்ளார்.
என் வெளியேற்றத்திற்கு பதில் இல்லை
இரண்டு மூத்த கிரிக்கெட் வீரர்களும் இந்த விஷயத்தைப் பற்றி முன்பு ஊடகங்களில் பேசாத நிலையில், 2021 டிசம்பரில் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது ஹர்பஜன் அதை லேசாக வெளிப்படுத்தினார். அவரது 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவில், “ஒருவர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திவிட்டு, அவருக்கு வாய்ப்பு கிடைக்காதபோது அல்லது வீழ்ச்சிக்கான காரணம் அவரிடம் சொல்லப்படாதபோது, பல கேள்விகள் மனதில் எழுகின்றன. நான் அணியில் இருந்து வெளியேறியது குறித்து பலரிடம் கேட்டேன், ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று ஹர்பஜன் டைனிக் ஜாக்ரானிடம் கூறினார். ஆனால் அதற்கு காரணம் தோனியா என்ற கேள்விக்கு அவர் மறுத்து வந்தார்.
நாங்கள் நல்ல நண்பர்கள்
"எம்எஸ் தோனி மீது எனக்கு எந்த புகாரும் இல்லை. உண்மையில், அவர் இத்தனை ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தார். நான் பிசிசிஐ மீது புகார் செய்தேன். பிசிசிஐயை நான் சர்கார் என்று அழைக்கிறேன்! அக்கால தேர்வாளர்கள் அதற்கு நியாயம் செய்யவில்லை. அவர்கள் அணியை ஒற்றுமையாக இருக்க அனுமதிக்கவில்லை" என்று அவர் நியூஸ் 18 க்கு அளித்த பேட்டியில் கூறினார். வெள்ளிக்கிழமை, தோஹாவில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின்போது ஸ்போர்ட்ஸ்யாரி உடனான உரையாடலில், ஹர்பஜன் இறுதியாக தானும் தோனியும் "நல்ல நண்பர்கள்" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
என் சொத்துக்களை அவர் எடுக்கவில்லை
"எம்.எஸ். தோனியுடன் எனக்கு ஏன் பிரச்சனை? நாங்கள் இந்தியாவுக்காக நிறைய கிரிக்கெட் விளையாடினோம், மிக மிக நல்ல நண்பர்களாக இருந்தோம், இன்னும் இருக்கிறோம். அவர் வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார், நான் என்னுடைய வாழ்க்கையில் பிஸியாகிவிட்டேன், அப்போதும் நான் அடிக்கடி சந்திப்பேன். எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை," என்றார். "எனக்குத் தெரிந்தவரை, அவர் எனது சொத்துக்கள் எதையும் எடுக்கவில்லை (என்று கூறிவிட்டு சிரிக்கிறார்). ஆனால் அவருடைய சில சொத்துக்களில், குறிப்பாக அவரது பண்ணை வீட்டின் மீது எனக்கு ஆர்வம் உள்ளது," என்று அவர் விளையாட்டாக கூறினார்.