Gambhir on Ashwin: “அவர் பந்துப்போட்டாலே எனக்கு பிடிக்காது...” - அஷ்வினின் பந்துவீச்சு குறித்து கம்பீர்
10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய அணி பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த இவரும் ஒரு முக்கியமான காரணம்
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் விக்கெட்டுகள் எடுத்த அஷ்வின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கபில்தேவ் எடுத்திருந்த 434 விக்கெட்கள் என்ற சாதனையை முறியடித்தார். 85 போட்டிகளில் 436* விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் படைத்திருக்கிறார் அஷ்வின்.
முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது விக்கெட் வீழ்த்திய அஷ்வின், ஹர்பஜனின் சாதனை முறியடித்திருந்தார். ஹர்பஜன், கபில் தேவை பின்னுக்குத்தள்ளிய அஷ்வின், இந்தியா சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில், சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன், அஷ்வின் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர்.
வீரர்கள் | டெஸ்ட் போட்டிகள் | விக்கெட்கள் |
அனில் கும்ப்ளே | 132 | 619 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | 85 | 436 |
கபில் தேவ் | 131 | 434 |
ஹர்பஜன் சிங் | 103 | 417 |
இது குறித்து அவர் பேசும்போது, “ஒரு பேட்டராக அஷ்வினின் பந்துகளை எதிர்கொள்ள எனக்கு பிடிக்காது. ஆனால், ஹர்பஜனின் பந்துகளை எதிர்கொள்ள பிடிக்கும். ஒரு இடதுகை பேட்டராக, அஷ்வின் என்னை அவுட் செய்துவிடுவார் என்பது எனக்கு தெரியும். ஆனால், ஹர்பஜன் ஒரு தனித்துவ ஸ்டைலில் பந்து வீசுவார். அவர் வீசும் தூஸ்ராவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்” என தெரிவித்திருக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய அணி பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த இவரும் ஒரு முக்கியமான காரணம். 2021 ஆண்டும் இந்திய அணிக்கு தன்னுடைய பந்துவீச்சின் மூலம் பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்தார். கடந்த ஆண்டு அஷ்வின் 63 விக்கெட் வீழ்த்தி இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். அதனை அடுத்து, 2022-ம் ஆண்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அஷ்வினின் சுழற்பந்துவீச்சைப் பற்றி கம்பீர் தெரிவித்திருக்கும் கருத்து அஷ்வினின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்