T20 World Cup 2024: அடி தூள்! அமெரிக்காவுக்கு அமுல்.. அயர்லாந்துக்கு நந்தினி - என்ன விஷயம்?
இந்தியாவின் பால் நிறுவனங்களான அமுல் மற்றும் நந்தினி ஆகிய நிறுவனங்கள் டி20 உலகக் கோப்பையில் ஸ்பான்சராக இணைந்துள்ளன.
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை:
ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டிகள் நேற்று தொடங்கியது. அதன்படி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, கனடா, அயர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், நமீபியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, ஓமன், உகாண்டா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இதில் முதல் போட்டியிலேயே தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கி இருக்கிறது அமெரிக்க அணி.
இதில் இன்று (ஜூன் 3 ) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா விளையாடுகிறது. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு நிறுவனங்கள் ஸ்பான்சராக உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் பால் நிறுவனங்களான அமுல் மற்றும் நந்தினி ஆகிய நிறுவனங்களும் டி20 உலகக் கோப்பையில் ஸ்பான்சராக இணைந்துள்ளன. அதேபோல் எச்.சி.எல்.டெக் நிறுவனமும் இதில் இணைந்துள்ளது.
அமுல்:
Congratulations to the USA Men’s National Team for an incredible win. Aaron Jones’s exceptional performance truly made him the star of the night. This is just the beginning. More to go! @usacricket#Amul #USANationalMensTeam#AmulMilk #T20 #AaronJones #USA pic.twitter.com/o6zY0C1bSW
— Amul.coop (@Amul_Coop) June 2, 2024
இந்திய பால் பிராண்டான அமுல் டி20 உலகக் கோப்பையை நடத்தும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கு (அமெரிக்கா) ஸ்பான்சர் செய்வதாக அறிவித்துள்ளது.
#Amul Topical: Amul is the official team partner of the Proteas men’s team! @ProteasMenCSA pic.twitter.com/TOdpvqFbnr
— Amul.coop (@Amul_Coop) June 2, 2024
அதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் அமுல் ஸ்பான்சராக உள்ளது. அதேபோல் இலங்கை அணிக்கும் ஸ்பான்சர் செய்கிறது அமுல் நிறுவனம்.
நந்தினி:
A @T20WorldCup update - Sunday
— Cricket Ireland (@cricketireland) June 2, 2024
We hit the gym for a morning session and then an afternoon of rest and team meetings.
Back to the nets tomorrow.
Don’t forget, all you need to know about our involvement in the tournament is here: https://t.co/j1vf3e4eG4#BackingGreen ☘️🏏 pic.twitter.com/vyEoRNWvf2
கர்நாடகா பால் சம்மேளனத்தின் (KMF) பிராண்டான நந்தினி அயர்லாந்து அணிக்கு ஸ்பான்சர்ஷிப்பை வழங்குகிறது. அதேபோல் ஸ்காட்லாந்து அணிக்கும் ஸ்பான்சராகவும் உள்ளது நந்தினி நிறுவனம்.
எச்.சி.எல்.டெக்:
இந்தியாவை தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCLTech ஆஸ்திரேலியா அணியின் ஸ்பான்சராக உள்ளது.
இந்திய போட்டிகளின் பட்டியல்:
ஜூன் 5: இந்தியா vs அயர்லாந்து, நியூயார்க், இரவு 8 மணி
ஜூன் 9: இந்தியா vs பாகிஸ்தான், நியூயார்க், இரவு 8 மணி
ஜூன் 12: இந்தியா vs அமெரிக்கா, நியூயார்க், இரவு 8 மணி
ஜூன் 15: இந்தியா vs கனடா, புளோரிடா, இரவு 8 மணி