Sourav Ganguly: பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி விருப்பமனு தாக்கல்..!
முன்னாள் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார்
![Sourav Ganguly: பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி விருப்பமனு தாக்கல்..! Former BCCI president Sourav Ganguly file nomination for President of Cricket Association of Bengal Sourav Ganguly: பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி விருப்பமனு தாக்கல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/23/7930e832394157b9c8ddd76754cc295d1666521355149571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார்.
பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 18ம் தேதியுடன் முடிவடைந்தது. பிசிசிஐ நிரிவாகிகளின் பதவிக்காலம் முடிந்த உடனேயே, அவர்களால் அந்த பதவிகளில் தொடர முடியாது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே, அவர்கள் மீண்டும் அந்த பதவியில் தொடரும் வகையில் விதி இருந்தது. இதை மாற்றி அமைக்கும் வகையில், பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
அதனை தொடர்ந்து செயலாளராக ஜெய் ஷா தொடர்ந்தார். ஆனால் கங்குலி , தலைவர் பதவியை தொடரவில்லை. இச்சூழலில்1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி அடுத்த பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
View this post on Instagram
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட சவுரவ் கங்குலியின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மம்தா பானர்ஜி, அவரை ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தேர்தலில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், சவுரவ் கங்குலி "நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டுள்ளார்" என்று வங்காள முதல்வர் கூறினார். "
West Bengal | Former BCCI president Sourav Ganguly arrives at Eden Gardens, Kolkata to file nomination for the post of President of Cricket Association of Bengal (CAB) pic.twitter.com/MIvAurDE6N
— ANI (@ANI) October 23, 2022
இந்நிலையில், இன்று முன்னாள் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)