IND vs ENG Test: ஒரு டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு மேல், சேஸ் செய்த இந்தியா! இதுவே முதல்முறை!
சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
டெஸ்ட் தொடர்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
150 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து இந்திய அணி:
அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்தது. அதேபோல், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 145 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த வகையில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து இந்திய அணி வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அதேபோல், தலைமை பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்ட பிறகு இங்கிலாந்து அணி சந்தித்த முதல் டெஸ்ட் தொடரும் இதுதான். அதன்படி, தான் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலேயே பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தேல்வியை தழுவியிருக்கிறது. அதேபோல், கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 17 முறை இந்திய அணி தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Dhruv Jurel: அறிமுக டெஸ்ட்.. ஆட்டநாயகன் விருது.. அசத்திய துருவ் ஜூரல்..