Prasid Krishna Marriage: இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா திருமணம்… நேரில் வாழ்த்திய பும்ரா, ஸ்ரேயாஸ்..!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரசித் கிருஷ்ணாவின் திருமணத்திற்கு பிரபல கிரிக்கெட் வீரர் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா ரச்சனா என்பவரை தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அவர், கடந்த செவ்வாயன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிலையில், திருமணம் நேற்று (ஜூன் 8) சக இந்திய கிரிக்கெட் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருடன் பல கர்நாடக வீரர்கள் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.
பிரசித் கிருஷ்ணா திருமணம்
27 வயதான பிரசித் கிருஷ்ணா, ஐபிஎல் 2023 சீசனை காயம் காரணமாக தவறவிட்ட நிலையில், தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இவர்கள் திருமணத்தை ஒட்டி இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அவரது மனைவி ரச்சனாவின் பல படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது, மேலும் கிருஷ்ணாப்பா கௌதம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பதிவிட்ட படங்களில் ஒன்றில், இந்த ஜோடி ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா மற்றும் பல முக்கிய கர்நாடக கிரிக்கெட் வீரர்களுடன் போஸ் கொடுப்பதைக் காணலாம்.
சமூக வலைதள பதிவுகள்
"வாழ்த்துக்கள் ஸ்கிடி," என்று ஷ்ரேயாஸ் ஐயர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதி, கிருஷ்ணப்பா கௌதமின் பதிவை மறுபகிர்வு செய்தார். கிருஷ்ணப்பா கவுதம் புது மண தம்பதியரை வாழ்த்தி அவர்களது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். பிரசித் கிருஷ்ணாவின் மனைவி ரச்சனா என்று புகைப்படத்தோடு அறிமுகம் செய்து வைத்திருந்தார். பிரைவேட் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கும் ரச்சனாவைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும், அவர் டெல் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிகிறார் என்று தெரிகிறது. தற்போது அவர் அமெரிக்காவின் டெக்சாஸில் வசிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
பிரசித்-இன் மனைவி யார்?
பிரசித்-இன் மனைவி கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றதாக கூறப்படுகிறது, அதன் பிறகு அவர் சிஸ்கோவில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மாணவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள உதவும் எட்டெக் வணிகத்தை நிறுவிய ரச்சனா, ஒரு தொழில்முனைவோராகவும் அறியப்படுகிறார். பிரசித் கிருஷ்ணா, எலும்பு முறிவு காரணமாக, சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகி இருந்தார். ஐபிஎல் 2022 மினி-ஏலத்தில், அவர் ரூ.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மேலும் அவர் தனது அணிக்காக ஆடி, இதுவரை 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் 2021 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியை அடைந்த அவர்கள் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்றனர்.
பிரசித் கிருஷ்ணா இந்திய அணி சாதனைகள்
ஐபிஎல் 2023க்கு, பிரதித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக சந்தீப் ஷர்மாவை ராஜஸ்தான் அணி தேர்ந்தெடுத்தது, நன்றாகவே பந்து வீசிய அவர், 12 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். குறிப்பாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக நன்றாக பந்து வீசி, முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் வெற்றிக்கு வித்திட்டார். கடைசி ஓவரை வீசிய அவர், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனிக்கு அடிக்க முடியாதபடி பந்து வீசி வெற்றியை பெற்று தந்தார்.
பிரசித் கிருஷ்ணா கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இருப்பினும் அவர் விளையாடும் XI இல் தனக்கென ஒரு இடத்தைக் பெற முடியவில்லை. ODI உலகக் கோப்பை 2023 நடைபெறும் முன்னர், அவர் முழு உடற்தகுதிக்கு திரும்புவார் என்று நம்புகிறார். மொத்தம் 14 ஒருநாள் போட்டிகளில், வலது கை வேகப்பந்து வீச்சாளர் இரண்டு ஐந்து விக்கெட்டுக்கள் உட்பட 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.