Sanju Samson Update: இந்திய அணியில் சஞ்சு எங்கே? ட்விட்டரில் டிரெண்டாகும் #JusticeforSanjuSamson
தனது ஐபிஎல் கரியரில், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி இருந்தபோதும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சுவின் பெயர் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த தொடருக்கு இந்திய அணியை ரோஹித் ஷர்மா தலைமை தாங்க உள்ளார். மேலும், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனின் பெயர் அணியில் இடம் பெறாததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால், #JusticeforSanjuSamson ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.
— Sanju Samson (@IamSanjuSamson) November 10, 2021
26 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015-ம் ஆண்டு டி-20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். திறமையான விக்கெட் கீப்பர் பேட்டராக இருந்தாலும், இந்திய அணியின் இடம் பிடிக்க முடியாமல் இதுவரை 9 சர்வதேச டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். சஞ்சு சாம்சனின் ஐபிஎல் கரியரில், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி இருந்தபோதும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சுவின் பெயர் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால், சஞ்சுவின் ஸ்டாஸ்களை சுட்டி காட்டி சஞ்சுவுக்கு ஆதரவாக ட்வீட்கள் பகிரப்பட்டு வருகின்றது.
The Way You have backed Rishabh, why BCCI Is unable to back Samson? 🤧🤧😐#JusticeForSanjuSamson #SanjuSamson @IamSanjuSamson pic.twitter.com/6GQ752penK
— India Our Home (@IndiaOurHome1) November 9, 2021
So as usual Sanju is dropped🙂 Man literally had his best IPL season🥲
— RO45 ☀️ (@Maanvi_264) November 9, 2021
Sanju started playing IPL at the age of 18 also won the emerging player award. He is now 26!
If groomed earlier he could hv been our no4.
Don't want him to be a wasted talent🥺#JusticeForSanjuSamson pic.twitter.com/eRi3Vuvsll
இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்),கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஹர்சல் பட்டேல், ஆவேஸ் கான், தீபக் சாஹர், முகமது சிராஜ், அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் ஐயர்
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்