மேலும் அறிய

England T20 World Cup Squad: IPL-ல் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள்; டி20 உலகக்கோப்பைக்கு தட்டித்தூக்கிய இங்கிலாந்து அணி!

டி20 உலகக் கோப்பை 2024 வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனை பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்கள் கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் டி20 உலகக் கோப்பை 2024 வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. நேற்று நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களை அறிவித்த சூழலில் இன்று இங்கிலாந்து அணியும் தங்கள் அணி வீரர்களை அறிவித்துள்ளது. இதில் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இந்த வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இவர்கள் ஐ.பி.எல் சீசனில் எப்படி விளையாடி உள்ளனர் என்பதை பார்ப்போம்:

வில் ஜாக்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஜ்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 45 லீக் போட்டி ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி16 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது

முக்கியமாக இந்த போட்டியில் வில் ஜாக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டினார் ஜாக்ஸ். மோஹித் சர்மா வீசிய 15 வது ஓவரில் இவருடைய ஆட்டம் தாருமாறாக இருந்தது. இந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியை பறக்கவிட்டார். வெறும் 31 பந்துகளில் அரைசதம் விளாசிய இவர் அடுத்த 10 பந்துகளில் சதத்தை எட்டினார். அதாவது அடுத்த 10 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். கடைசி வரை களத்தில் நின்ற வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசி 100 ரன்கள் விளாசி அசத்தினார்.

பிலிப் சால்ட்:

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 42 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலில் சால்ட் மற்றும் சுனில் நரேன்சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி அதிரடியான தொடக்கத்தை பவர்ப்ளேயில் பெற்றுக்கொடுத்தது. இருவரும் தங்களது வெறித்தனமான பேட்டிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெளிப்படுத்தினர். இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.

அதன்படி இவர்களது பார்ட்னர்ஷிப் 138 ரன்களை குவித்தது. 10.2 வது ஓவரில் தான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதல் விக்கெட்டையே இழந்தது.  ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த  பிலிப் சால்ட் மொத்தம் 37 பந்துகள் களத்தில் நின்று 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 75 ரன்களை குவித்தார்

ஜானி பேர்ஸ்டோவ்:

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற 42 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களை குவித்தது

பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் களம் இறங்கினார்கள். இதில் பிரப்சிம்ரன் சிங் வெறும் 20 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசி 54 ரன்கள் குவித்தார். மறுபுறம் கடந்த இரண்டு போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பேர்ஸ்டோவ் தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்

இவர்களது ஜோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரின் பந்துகளை சிக்ஸரும் கவுண்டர்களாக பறக்க இவர்களது ஜோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரின் பந்துகளை சிக்ஸரும் பௌண்டரிகளையும் பறக்கவிட்டது. இவ்வளவு ரன்களை டி20 போன்ற போட்டிகளில் சேஸ் செய்வது என்பது கடினமான ஒன்று. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேர்ஸ்டோவ் மற்றும் சசாங் சிங் அதிரடி ஆட்டத்தால் சர்வதேச உலக டி20 போட்டி வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தனர். அந்த வகையில் கடைசிவரை களத்தில் நின்ற சசாங் சிங் 28 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி 68 ரன்களை குவித்தார். மறுபுறம் பேர்ஸ்டோவ் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை மொத்தம் 108 ரன்களை குவித்தார்

ஜோஸ் பட்லர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஐ.பி.எல் சீசன் 17ன் 19 வது லீக் போட்டி ஏப்ரல் 6 ஆம்  நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தன்னுடைய 100 வது போட்டியை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார்.

முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. இதில் தன்னுடைய 100வது ஐ.பி.எல் போட்டியில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார் ஜோஸ் பட்லர். 17 வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் நின்ற துருவ் ஜூரல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஷிம்ரோன் ஹெட்மியர் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். 19 வது ஓவரை பெங்களூரு அணி வீரர் முகமது சிராஜ் வீசினார். இரண்டு பந்துகளை டாட் வைத்தார்.

மூன்றவது பந்தில் பவுண்டரி விளாசினார் ஹெட்மியர். நான்காவது பந்தில் சிங்கிள் தட்ட கடைசி பந்தில் பட்லர் ஒரு சிங்கிள் தட்டினார். 19 வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து இருந்தது; ஜோஸ் பட்லர் 94 ரன்கள் எடுத்து இருந்தார். கடைசி ஓவரில் 1 ரன் எடுத்தால் வெற்றி 6 ரன்கள் எடுத்தால் தன்னுடைய ஐ.பி.எல் சதம் என்ற நிலையில் கேமரூன் கிரீன் வீசிய 20 ஓவரின் முதல் பந்தை பரபரப்பான நிமிடங்களுக்கு மத்தியில் சிக்ஸருக்கு பறக்க விட்டார் பட்லர். ராஜஸ்தான் அணி ரசிகர்களின் கர ஓசைகளுக்கு மத்தியில் தன்னுடைய 100 வது ஐ.பி.எல் போட்டியில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியுடன் சதத்தை பதிவு செய்தார். அந்த வகையில் 58 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என மொத்த 100 ரன்களை குவித்தார் ஜோஸ் பட்லர் அந்த போட்டியில் அசத்தி இருந்தார். இப்படி இந்த ஐ.பி.எல் சீசனில் மிரட்டியுள்ள இவர்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர்களை மிரட்டக்காத்திருக்கின்றனர் என்பதே உண்மை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget