David Warner: கில்-கம்பீருக்கு 2027 WC-ல் வாய்ப்பில்லையா? வைரலாகும் டேவிட் வார்னர் மீம்ஸ்கல்.. உண்மை என்ன?
"ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட 2027 உலகக் கோப்பையில் ஷுப்மான் கில் மற்றும் கவுதம் கம்பீர் இடம் குறித்து எனக்கு அதிக சந்தேகம் உள்ளது" என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு கில் மற்றும் கம்பீரின் இடம் டவுட் தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேவிட் வார்னர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலிய தொடர்:
ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் வென்றது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலிய அணியும்சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோகித்-கோலி இடம்:
இந்த ஒருநாள் தொடருக்கு முன்பும், தொடரின் போதும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தாலும் அடிலெய்டில் 73 ரன்களும் சிட்னியில் 121 ரன்களும்எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ரோகித் சர்மா இந்த தொடரில் 202 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதையும் வென்றார். மறுப்புறம் கோலி சிட்னியில் 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.
வார்னர் அப்படி சொன்னாரா?
டேவிட் வார்னரை மேற்கோள் காட்டி ஒரு பதிவு வைரலாகி வருகிறது, அதில் கவுதம் கம்பீர் மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் இடம் 2027 உலகக் கோப்பை வரை பாதுகாப்பானது இல்லை என்று அவர் என்று அவர் கூறியதாக பதிவு வைரலாகி வருகிறது.
"ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட 2027 உலகக் கோப்பையில் ஷுப்மான் கில் மற்றும் கவுதம் கம்பீர் இடம் குறித்து எனக்கு அதிக சந்தேகம் உள்ளது" என்று டேவிட் வார்னர் கூறியதாகக் கூறப்படும் இந்தக் கூற்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இருப்பினும், வர்ணனையின் போது வார்னர் இதைச் சொன்னாரா என்பதை ABP செய்திகள் உறுதிப்படுத்தவில்லை.
David Warner 🤣🤣🤣
— Free Hit 👊 (@SyedNaf16) October 26, 2025
About Shubhman Gill and Gautam Gambhir#ViratKohli𓃵 #RohitSharma𓃵 #INDvsAUS #AUSvIND pic.twitter.com/U8swgJYomp
அடுத்து ரோகித் கோலியை எப்போது பார்க்கலாம்?
ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்கள் இருவரும் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள். இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானது, அந்த தொடரில் ரோஹித் மற்றும் விராட் விளையாடுவதைக் காணலாம். இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை நடைபெறும்.





















