abp live

அதென்ன ப்யூட்டி ஸ்லீப்!

Published by: ஜான்சி ராணி
abp live

உடல் வளர்ச்சிக்கும், சீரான செயல்பாட்டுக்கும் முக்கியமானது தூக்கம் இதற்கும். அழகுக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. எந்த வித சலனமும் இல்லாத ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது, உடலில் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

abp live

ஒரு நாளுக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் அவசியமானது. ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்கினால் ஆரோக்கிய சீர்கேடு உண்டாகி முதுமைக்கான அறி குறிகள் விரைவாகத் தோன்றும்.

abp live

இரவில் போதுமான நேரம் தூங்காமல் அடுத்த நாள் காலையில் கண் விழிக்கும்போது,உங்கள் சருமமும், உடலும் சோர் வடைந்து புத்துணர்வு இன்றி காணப்படுவதை உணர முடியும்.

abp live

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுவது, அதிக உப்பு, காரம் உள்ள உணவைத் தவிர்ப்பது, படுக்கை அறையில் இதமான சூழலை ஏற்படுத்துவது ஆகியவை ஆழ்ந்த தூக்கம் பெறுவதற்கான வழிகளாகும்.

abp live

இரவில் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால், கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் ஏற்படும். சில சமயங்களில் கண்கள் வீங்கியது போல் தோற்ற மளிக்கும். அவற்றை மறைக்க மேக்கப் உதவினா லும், அது தற்காலிகமான தீர்வாகவே இருக்கும்.

abp live

குறைவான தூக்கம்,பசியைத் தூண்டும் 'கிரெலின்' எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.

abp live

தூக்கமின்மை மன அழுத்தத்தை உண்டாக்கும். இதனால் உடலில் ஹார்மோன்கள் சீரற்று சுரக்கும். இதன் விளைவாக முகப்பருக்கள் மற்றும் சரும பாதிப்புகள் ஏற்படும். 8 மணி நேர தூக்கம் அவசியம்.