BCCI: இந்திய அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து பைஜூஸ், எம்.பி.எல். விலகல்..? என்ன காரணம்..?
BCCI: இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருக்கும் பைஜூஸ் மற்றும் எம்.பி.எல். நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தத்தினை முடித்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BCCI: இந்திய அணியின் ஸ்பான்சர்களாக உள்ள நிறுவனங்கள் பைஜூஸ் மற்றும் எம்.பி.எல். இவை தற்போது தங்களது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்ததை முடித்துக்கொண்டு, ஸ்பான்சஷிப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர்களான பைஜூஸ் மற்றும் எம்.பி.எல். ஸ்போர்ட்ஸ் ஆகிய இருவர் பி.சி.சி.ஐ. உடனான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், பைஜூஸ் தனது ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை 35 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நவம்பர் 2023 வரை நீட்டித்தது.
பைஜூஸ் இப்போது பி.சி.சி.ஐ. உடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள விரும்புகிறது என தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ தரப்பில், குறைந்தபட்சம் மார்ச் 2023 வரை ஸ்பானசர்ஷிப்பில் தொடருமாறு பைஜூஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒப்பந்தத்தை நிறுத்துமாறு கோரி 4.11.2022 அன்று பி.சி.சி.ஐ.க்கு பைஜுவிடமிருந்து மின்னஞ்சல் வந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ தரப்பு...
பைஜூவுடன் நாங்கள் நடத்திய விவாதங்களின்படி, தற்போதைய நிலையிலேயே தொடருமாறும், குறைந்தபட்சம் 31.3.2023 வரை ஸ்பான்சர்ஷிப்பைத் தொடருமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. பைஜூஸ் நிறுவனமானது 2019 ஆம் ஆண்டில் அதற்கு முன்னதாக ஸ்பான்சராக இருந்த Oppoவுக்கு பதிலாக ஸ்பான்சர்ஷிப்பில் இருந்தது. கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பையின் ஸ்பான்சர்களில் பைஜூஸ் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மற்றொரு ஸ்பான்சர் நிறுவனமான எம்பிஎல் நிறுவனமும் தனது ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்திடமும் பிசிசிஐ தரப்பு, குறைந்தது அடுத்த வருடம் மார்ச் மாதம் இறுதிவரை அதாவது 31.3.2023 வரை ஸ்பான்சர்ஷிப்பை தொடர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் முடிவு:
தேர்வுக் குழு அமைக்கப்பட்ட பிறகு மத்திய ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படும் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்கள் குறித்து அபெக்ஸ் கவுன்சில் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட்ட பின்னரே அது செய்யப்படும். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான குழுவை பிசிசிஐ நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. மேலும், தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்று, இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.