மேலும் அறிய

Axar Patel Bowling Record: யாருக்கும் அஞ்சாத ஆளு... 5 முறை 5 விக்கெட்... பேட்ஸ்மேன்களை மிக்சர் சாப்பிட வைக்கும் அக்சர்!

ராஸ் டேலர், ஹென்ரி நிக்கோல்ஸ், 95 ரன்கள் எடுத்து சதம் கடக்க இருந்த அதிரடி ஓப்பனர் லாதம், டாம் ப்ளண்டெல், டிம் சவுதி என அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அக்சர் பட்டேல்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி ஸ்ரேயாஸ் சதம், சுப்மன்கில் மற்றும் ஜடேஜா அரைசதங்கள் உதவியுடன் 345 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்திருந்தது.

மூன்றாவது நாள் ஆட்டம் முதல் பாதி:

அதனை தொடர்ந்து, மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நியூசிலாந்திற்கு எதிராக அஸ்வின் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ரஹானே தொடர்ந்து அஸ்வினுக்கே ஓவர்களை வாரி வழங்கினார். அவரது நம்பிக்கைக்கு பலன் கிடைத்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை இழந்தது.

இந்திய அணிக்கு குடைச்சல் அளித்து வந்த வில் யங், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 151 ஆக உயர்ந்தபோது 214 பந்தில் 15 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்திருந்த வில்யங் விருத்திமான் சஹாவிற்கு பதில் கீப்பிங் செய்த ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, அபாயகரமான நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். களமிறங்கியது முதல் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ரன்களை சேர்க்க மிகவும் தடுமாறினார். இருப்பினும் மறுமுனையில் அரைசதத்தை கடந்து டாம் லாதம் மிகவும் சிறப்பாக ஆடி வந்தார். அணியின் ஸ்கோர் 197 ரன்களை எட்டியபோது, டேஞ்சர் பேட்ஸ்மேன் வில்லியம்சன் 64 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களை எடுத்த நிலையில் உமேஷ்யாதவ் ஆட்டமிழந்தார். 

அக்சரின் அதிரடி தொடங்கியது இங்கேதான்:

அவரை அடுத்து களமிறங்கிய ராஸ் டேலரை பெவிலியனுக்கு அனுப்பினார் அக்சர் பட்டேல். இந்த டெஸ்ட் போட்டியில் இதுதான் அவருக்கு முதல் விக்கெட். அதனை அடுத்து, ஹென்ரி நிக்கோல்ஸ், 95 ரன்கள் எடுத்து சதம் கடக்க இருந்த அதிரடி ஓப்பனர் லாதம், டாம் ப்ளண்டெல், டிம் சவுதி என அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அக்சர் பட்டேல். இன்றைய போட்டி இன்னும் முடியாத நிலையில், மதியம் 3.20 மணி நிலவரப்படி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருக்கிறார் அக்சர். அவரது அசத்தல் பவுலிங்கால் நியூசிலாந்து அணி தடுமாறி கொண்டிருக்கிறது. 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை எட்டி, அதிக ரன்களை குவிக்குமா நியூசிலாந்து என்பதை பார்ப்போம்.

அக்சர் ரெக்கார்டு:

இந்நிலையில், இன்றைய போட்டியில் இதுவரை 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம்,  டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் அக்சர். அதவாது அக்சர் விளையாடியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில், 5 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget