Watch Video: விராட் 100வது டெஸ்ட்... ஒரே வீடியோவில் வாழ்த்து தெரிவித்த சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக்
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் உள்ளிட்டோர் விராட் கோலிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
![Watch Video: விராட் 100வது டெஸ்ட்... ஒரே வீடியோவில் வாழ்த்து தெரிவித்த சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் BCCI shares a special video for virat kohli on his 100th test match Watch Video: விராட் 100வது டெஸ்ட்... ஒரே வீடியோவில் வாழ்த்து தெரிவித்த சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/5ed6ebcdb6eaaa8efe70a254ad5885a9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. மொகாலியில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டி விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்த விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டிக்கு நேரில் சென்று மைதானத்தில் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்ய ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. 50% பார்வையாளர்களுடன் போட்டி நடைபெறலாம் என தெரிவித்திருக்கிறது.
இது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விராட் கோலி விளையாட இருக்கும் 100வது டெஸ்ட் போட்டிக்கு எந்த தடையும் இல்லை. அரசு அறிவித்திருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கலாம்” என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், பிசிசிஐ சார்பில் விராட் கோலிக்கு ஒரு சிறப்பு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் உள்ளிட்டோர் விராட் கோலிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
வீடியோவைக் காண:
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦!
— BCCI (@BCCI) March 2, 2022
Welcome to the 1⃣0⃣0⃣-Test club Virat Kohli 👏 👏#TeamIndia greats share their thoughts on @imVkohli's landmark Test, his achievements & the impact he's had on Indian cricket. 🔝 👍
Watch the full feature 🎥 🔽https://t.co/m135xwB2zt pic.twitter.com/gzN71BZnCn
வீடியோவில் பேசி இருக்கும் சச்சின், “நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நாங்கள் எங்களுக்குள் விவாதித்து கொண்டோம். அப்போது விராட் கோலியைப் பார்த்து, சிறப்பாக பேட்டிங் செய்கிறார். இவர் ஒரு கவனிக்கத்தக்க வீரராக வருவார் என்று பேசிக்கொண்டோம். ஆல் தி பெஸ்ட்” என வாழ்த்திருக்கிறார். கங்குலி, டிராவிட், சேவாக் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால், பிரியங்க் பன்சல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எஸ்.பாரத், அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)