BCCI: ஹர்மன்ப்ரீத், தீப்தி, மந்தனாவுக்கு மட்டும்தான் கிரேடு ஏ ஒப்பந்தம் - பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த விபரங்கள் இதோ..!
BCCI: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்தங்களை (வீரர்கள் தக்கவைப்பு) பிசிசிஐ இன்று (ஏப்ரல் 27)அறிவித்தது.
- ஹர்மன்பிரீத் கவுர்
- ஸ்மிருதி மந்தனா
- தீப்தி ஷர்மா
கிரேடு பி
- ரேணுகா தாக்கூர்
- ஜெமிமா ரோட்ரிக்ஸ்
- ஷஃபாலி வர்மா
- ரிச்சா கோஷ்
- ராஜேஸ்வரி கயக்வாட்
கிரேடு சி
- மேக்னா சிங்
- தேவிகா வைத்யா
- சப்பினேனி மேகனா
- அஞ்சலி சர்வானி
- பூஜா வஸ்த்ரகர்
- சினே ராணா
- ராதா யாதவ்
- ஹர்லீன் தியோல்
- யாஸ்திகா பாட்டியா
2020-21 சீசனுக்கான வருடாந்திர தக்கவைப்பு பிசிசிஐயால் இன்று அறிவிக்கப்பட்டது, இதில் வீராங்கனைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். அதில் A கிரேடு ஒரு வீராங்கனைகளுக்கு ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில் 50 லட்சம் மற்றும் கிரேடு B வீராங்கனைகளுக்கு இந்திய மதிப்பில் 30 லட்சம் ஆண்டு சம்பளமாக வழங்கப்படும். கிரேடு C வீராங்கனைகளுக்கு ஆண்டு சம்பளம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்மன்ப்ரீத் கவுர்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உலக மகளிர் கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத வீராங்கனை. இவர் இதுவரை 124 ஒருநாள் போடிகளில் விளையாடி 105 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளார். எதிரணிக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருக்கும் இவர், 5 சதங்களும் 15 அரைசதங்களும் விளாசியுள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 171 ரன்களாக உள்ளது. அதேபோல் 151 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 136 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளார். டி20யில் அவர் மொத்தம் 3ஆயிரத்து 58 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 10 அரைசதங்கள் அடங்கும்.
ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வருங்கால கேப்டன் ஸ்மிருதி மந்தனா தான் என்ற செய்தி பரவலாக உள்ளது. இளம் விராங்கனையான இவர் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர். இவர் இதுவரை, 4 டெஸ்ட் போட்டிகள், 77 ஒருநாள் போட்டிகள், 116 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் டெஸ்ட் போட்டியில் ஒரு சதமும், ஒருநாள் போட்டியில் 5 சதமும் விளாசியுள்ளார்.
தீப்தி சர்மா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா. இவரது சிறப்பான பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கினால் இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 95 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டியைப் பொறுத்தமட்டில் 92 போட்டிகளில் 90 போட்டிகளில் பந்து வீசி 102 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல் இவரது சிறப்பான பேட்டிங்கினால் இதுவரை ஒருநாள் போட்டியில் ஒரு சதம் 12 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 188 ஆகும்.