Australia: 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த ஆஸ்திரேலியா.. முதல் இடத்தில் இந்திய அணியா?
ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 609 போட்டிகளில் வெற்றியும், 348 தோல்வியும் கண்டுள்ளது.
1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. 1000 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை கொண்டது இந்திய அணிதான்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதுவரை அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரே அணி இந்திய அணி மட்டும்தான். இதுவரை 1055 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. ஆனால், இந்தியாவை விட குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி வெற்றி சதவீதத்தை அதிகமாக கொண்டுள்ளது. அதாவது, இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
அதிக வெற்றிகள்:
ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 609 போட்டிகளில் வெற்றியும், 348 தோல்வியும் கண்டுள்ளது. இதன் படி ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 63.5 ஆகும். 1055 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 559 போட்டிகளில் வெற்றி பெற்று 443ல் தோல்வியடைந்த இந்திய அணி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, இதன் படி இந்திய அணியின் வெற்றி சதவீதம் 55.73 ஆகும்.
முழு விவரங்கள்:
அணிகள் | முதல் ஒருநாள் போட்டி | மொத்த போட்டிகள் | வெற்றி | தோல்வி | டை | முடிவு இல்லை | %வெற்றி* |
---|---|---|---|---|---|---|---|
ஆப்கானிஸ்தான் | 19 ஏப்ரல் 2009 | 161 | 77 | 79 | 1 | 4 | 49.36 |
ஆஸ்திரேலியா | 5 ஜனவரி 1971 | 1,000 | 609 | 348 | 9 | 34 | 63.50 |
வங்கதேசம் | 31 மார்ச் 1986 | 435 | 157 | 268 | 0 | 10 | 36.94 |
பெர்முடா | 17 மே 2006 | 35 | 7 | 28 | 0 | 0 | 20.00 |
கனடா | 9 ஜூன் 1979 | 82 | 20 | 60 | 0 | 2 | 25.00 |
கிழக்கு ஆப்பிரிக்கா | 7 ஜூன் 1975 | 3 | 0 | 3 | 0 | 0 | 0.00 |
இங்கிலாந்து | 5 ஜனவரி 1971 | 797 | 400 | 357 | 9 | 31 | 52.80 |
ஹாங்காங் | 16 ஜூலை 2004 | 26 | 9 | 16 | 0 | 1 | 36.00 |
இந்தியா | 13 ஜூலை 1974 | 1,055 | 559 | 443 | 9 | 44 | 55.73 |
அயர்லாந்து | 13 ஜூன் 2006 | 198 | 79 | 101 | 3 | 15 | 43.98 |
ஜெர்சி | 27 மார்ச் 2023 | 5 | 1 | 4 | 0 | 0 | 20.00 |
கென்யா | 18 பிப்ரவரி 1996 | 154 | 42 | 107 | 0 | 5 | 28.18 |
நமீபியா | 10 பிப்ரவரி 2003 | 48 | 23 | 24 | 0 | 1 | 48.93 |
நேபாளம் | 1 ஆகஸ்ட் 2018 | 59 | 30 | 27 | 1 | 1 | 52.58 |
நெதர்லாந்து | 17 பிப்ரவரி 1996 | 123 | 41 | 76 | 2 | 4 | 35.29 |
நியூசிலாந்து | 11 பிப்ரவரி 1973 | 824 | 379 | 395 | 7 | 43 | 48.97 |
ஓமன் | 27 ஏப்ரல் 2019 | 46 | 23 | 24 | 1 | 1 | 52.22 |
பாகிஸ்தான் | 11 பிப்ரவரி 1973 | 970 | 512 | 428 | 9 | 21 | 54.42 |
பப்புவா நியூ கினியா | 8 நவம்பர் 2014 | 66 | 14 | 51 | 1 | 0 | 21.96 |
ஸ்காட்லாந்து | 16 மே 1999 | 153 | 68 | 77 | 1 | 7 | 46.91 |
தென்னாப்பிரிக்கா | 10 நவம்பர் 1991 | 672 | 410 | 235 | 6 | 21 | 63.44 |
இலங்கை | 7 ஜூன் 1975 | 912 | 417 | 450 | 5 | 40 | 48.10 |
ஐக்கிய அரபு நாடுகள் | 13 ஏப்ரல் 1994 | 108 | 37 | 70 | 1 | 0 | 34.72 |
அமெரிக்கா | 10 செப்டம்பர் 2004 | 51 | 22 | 27 | 2 | 0 | 45.09 |
வெஸ்ட் இண்டீஸ் | 5 செப்டம்பர் 1973 | 873 | 420 | 412 | 11 | 30 | 50.47 |
ஜிம்பாப்வே | 9 ஜூன் 1983 | 572 | 151 | 398 | 8 | 15 | 27.82 |
அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:
ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆவார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிக போட்டிகளில் (463) விளையாடியுள்ளார்.
வீரர்கள் | நாடு | நாடு | ஆண்டுகள் | போட்டிகள் |
1 | சச்சின் டெண்டுல்கர் | இந்தியா | 1989-2012 | 463 |
2 | ஜெயவர்த்தனே | இலங்கை | 1998-2015 | 448 |
3 | ஜெயசூர்யா | இலங்கை | 1989-2011 | 445 |
4 | சங்ககரா | இலங்கை | 2000-2015 | 404 |
5 | ஷாகித் அப்ரிடி | பாகிஸ்தான் | 1996-2015 | 398 |
6 | இன்சமம் உல் ஹக் | பாகிஸ்தான் | 1991-2007 | 378 |
7 | ரிக்கி பாண்டிங் | ஆஸ்திரேலியா | 1995-2012 | 375 |
8 | வாசிம் அக்ரம் | பாகிஸ்தான் | 1984-2003 | 356 |
9 | முத்தையா முரளிதரன் | இலங்கை | 1993-2011 | 350 |
10 | எம்.எஸ்.தோனி | இந்தியா | 2004-2019 | 350 |