மேலும் அறிய

David Warner Last Test: உள்நாட்டு போட்டிகளில் விளையாடாமல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்.. இந்த டெஸ்டுடன் ஓய்வுபெறும் டேவிட் வார்னர்!

David Warner Last Test: ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்று தனது கடைசி டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. ஜனவரி 3ம் தேதியான இன்று காலை 5 மணி முதல் இரு அணிகளும் மோதி வருகின்றன.. 

இந்த டெஸ்ட் தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தாலும், இந்த போட்டியில் இரண்டு முக்கியமான விஷயங்கள் பார்க்கப்படுகிறது. அதில் முதலாவது டெஸ்டில் டேவிட் வார்னரின் கடைசி போட்டி, இரண்டாவது, இந்த போட்டியில் வெற்றிபெற்று தனது கவுரவத்தை பாகிஸ்தான் அணி காப்பாற்றி கொள்ள வேண்டும். 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்று தனது கடைசி டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வருகிறார். முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது டெஸ்ட் தொடராக இருக்கும் என்று நீண்ட காலத்திற்கு முன்பு அறிவித்தார். வார்னர் நீண்ட காலமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்களில் வார்னரும் ஒருவர். வார்னர் ஒரு உள்நாட்டுப் போட்டியில் விளையாடாமல் சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கியவர். 

முதல்தர போட்டியில் விளையாடாமல் சர்வதேச போட்டியில் அறிமுகம்: 

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ப்ளேயிங்-11ல் இவருக்கு இடம் பெற்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், டேவிட் வார்னர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடாமல் ஆஸ்திரேலிய தேசிய அணியில் நுழைந்தார். 132 ஆண்டுகால ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல்தர கிரிக்கெட் அனுபவம் இல்லாமல் ஒரு வீரர் தேசிய அணியில் விளையாடுவது இதுவே முதல்முறையாக இருந்தது. 

டேவிட் வார்னர் தனது 23வது வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே வார்னர் இப்படி ஒரு இன்னிங்ஸ் ஆடியது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அறிமுக போட்டியில் வார்னர் 43 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார். இதன்மூலம, தனது முதல் போட்டியிலேயே 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி20யில் இந்த அதிரடியான இன்னிங்ஸால் அவருக்கு விரைவில் ஒருநாள் அணியிலும் இடம் கிடைத்தது. ஏழு நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

டேவிட் வார்னர் தனது சர்வதேச அறிமுகத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் முதல் முறையாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடினார். அபார திறமையுடன் கிரிக்கெட் விளையாடிய டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக சிறிது காலம் எடுத்தது. ஆனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தபின், வார்னர் யாரும் எட்ட முடியாத வகையில் உச்சம் தொட்டார். 

கடந்த 13 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்தார் டேவிட் வார்னர். ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்டில் அறிமுகமானதில் இருந்து, கிரிக்கெட் உலகில் அவருக்கு இணையான ஒரு டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் இல்லை என்பது இவரது செயல்திறன் மூலமே தெரியும். கடந்த 13 வருடங்களில் மற்ற எந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேனும் அடிக்க முடியாத அளவுக்கு ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக சதம் அடித்துள்ளார்.

டேவிட் வார்னரின் புள்ளிவிவரங்கள்:

டேவிட் வார்னர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தம் 111 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கு அவர் 44.58 பேட்டிங் சராசரியில் 26 சதங்கள், 36 அரை சதங்களுடன் மொத்தம் 8695 ரன்கள் எடுத்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதமும் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 335 ரன்கள்.

ஆஸ்திரேலிய அணிக்காக வார்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார். வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் 45.30 சராசரியுடன் 6932 ரன்களும், 99 டி20 போட்டிகளில் 32.88 சராசரியில் 2894 ரன்களும் எடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இருப்பினும் சர்வதேச டி20 குறித்து அவர் எதுவும் கூறவில்லை. இதன்மூலம், டேவிட் வார்னர் டி20யில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget