AUS vs ENG 3rd ODI: வார்னர், ட்ராவிஸ் ஹெட் சதம்..! இங்கி. பந்துவீச்சை துவம்சம் செய்த ஆஸ்திரேலியா..
AUS vs ENG 3rd ODI: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
AUS vs ENG 3rd ODI: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி வருகிறது.
The Australia duo joined a pair of India greats as the only players to have combined for two partnerships of 250 runs or more in ODI cricket 💥
— ICC (@ICC) November 22, 2022
Details 👇https://t.co/0seM7XYl2s
மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி. முதல் விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்து, இங்கிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அடுத்தடுத்து சதம் அடித்து இங்கிலாந்து பந்து வீச்சை அடித்து விளாசியுள்ளனர்.
டிராவிஸ் ஹெட் 130 பந்துகளில் 152 ரன்கள் விளாசியுள்ளார். அதில் அவர் 14 ஃபோர், 4 சிக்ஸர் பறக்கவிட்டுள்ளார். டேவிட் வார்னர் 102 பந்துகளில் 106 ரன்கள் விளாசினார். அவர் 8 ஃபோர், 2 சிக்ஸர் விளாசினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வார்னர் அடித்த சதம் இது தான். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்துள்ளனர்.