மேலும் அறிய

Tilak Varma Debut: அறிமுகமானார் அதிரடி புயல் திலக் வர்மா.. சீனியர்களுக்கு இன்று ரெஸ்ட்..!

ஆசிய கோப்பையில் கொழும்பில் இன்று நடக்கும் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுக வீரராக திலக் வர்மா களமிறங்கியுள்ளார்.

ஆசிய கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு இந்தியா – இலங்கை அணிகள் சென்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில், சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.

திலக் வர்மா அறிமுகம்:

இந்த போட்டியின் முடிவு ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால், இரு அணிகளும் எந்த நெருக்கடியும் இல்லாமல் ஆடுகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இன்றைய போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்றைய போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக திலக் வர்மா களமிறங்கியுள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்காக டி20 போட்டியில் ஆடிய திலக் வர்மா இன்றைய போட்டி மூலம் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார். கடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்தார். குறுகிய காலத்திலே இந்திய அணிக்குள் இடம்பிடித்த திலக் வர்மாவிற்கு ரசிகர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சீனியர்களுக்கு ஓய்வு:

ஆந்திராவைச் சேர்ந்த திலக் வர்மா இதுவரை 7 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 174 ரன்கள் எடுத்துள்ளார். 25 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 3 அரைசதத்துடன் 740 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம் அறிமுகமான திலக் வர்மா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறப்பாக ஆடினார். அதைத்தொடர்ந்து, அயர்லாந்து தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அயர்லாந்து தொடரில் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில், ஒருநாள் போட்டியில் இன்று அவர் களமிறங்கியுள்ளார்.

திலக் வர்மா மட்டுமின்றி பிரசித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் களமிறங்கியுள்ளனர். ஆல்ரவுண்டரான அக்‌ஷர் படேல், அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில் இன்று அவர்கள் களமிறங்கியுள்ளனர்.

வங்கதேசம் தடுமாற்றம்:

இறுதிப்போட்டிக்கு முன்பு அனுபவம் வாய்ந்த வீரர்களான விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்கதேச அணி 28 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்று போட்டி நடக்கும் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில்தான் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Asia Cup IND vs BAN: டாஸ் வென்ற இந்தியா... வலுவான இலக்கை நிர்ணயிக்குமா வங்கதேசம்..?

மேலும் படிக்க: SL vs PAK: கடைசி வரை திக்.. திக்..! கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி... போராடி தோற்றது பாகிஸ்தான்..!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
Operation Sindoor: பிரம்மோஸ் தாக்கியது உண்மை தான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
Operation Sindoor: பிரம்மோஸ் தாக்கியது உண்மை தான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
Embed widget