மேலும் அறிய

Ashes Series 2023: இரண்டாவது டெஸ்ட்டிலும் வென்று இங்கிலாந்து மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா

Ashes Series 2023: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வென்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Ashes Series 2023: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வென்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளிலும், வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் தனது வெற்றிக்கணக்கை துவங்கிய நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 371 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 50 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வளவு தான் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று விடும் என அனைவரும் கூறத் தொடங்கி விட்டனர். ஆனால் அதன் பின்னர் பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியை மீட்க ஆரம்பித்தனர். 

சிறப்பாக ஆடி வந்த பென் டக்கெட் 83 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க, அதன் பின்னர் வந்த பேரிஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்தார். அதுவரை மிகவும் பொறுமையாக ஆடி வந்த ஸ்டோக்ஸ் அதன் பின்னர் ருத்ரதாண்டவ ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதாவது, தான் எதிர்கொண்ட முதல் 126 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்த ஸ்டோக்ஸ், அடுத்த 21 பந்தில் 46 ரன்கள் குவித்தார். அதில் ஹாட்ரிக் சிக்ஸர்களும் அடங்கும்.  

அதன் பின்னரும் பொறுப்புடன் ஆடி  அணிக்கு நம்பிக்கையாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து அணியின் நம்பிக்கை உடைந்தது. ஸ்டோக்ஸின் விக்கெட்டுக்குப் பின்னர் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வித் தழுவியது.  இரண்டாவது இன்னிங்ஸின் இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது. 

இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக தான் எதிர்கொண்ட ஆஷஸ் தொடரின் 6 போட்டிகளில் 5இல் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் சந்தித்துள்ளார். இதனால் ஆஷஸ் தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத கேப்டனாக உருவெடுத்துள்ளார் பேட் கம்மின்ஸ். 

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
Embed widget