Abdul Razzaq: ”வாய் தவறி பேசிட்டேன், மன்னிச்சிருங்க” - ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்
Abdul Razzaq: இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் தொடர்பான கருத்துக்கு, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் பகிரங்கமான மன்னிப்பு கேட்டுள்ளார்.
Abdul Razzaq: கிரிக்கெட் வர்ணனையின்போது ஐஸ்வர்யா ராய் தொடர்பாக வாய் தவறி பேசிவிட்டதாக, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் விளக்கமளித்துள்ளார்.
அப்துல் ரசாக்கின் சர்ச்சை பேச்சு:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான அப்துல் ரசாக், 2023 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை விமர்சித்தார். அப்போது, இந்திய நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்புபடுத்தி அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் குவிய, இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்த, ஐஸ்வர்யா ராய் குறித்த தனது கருத்து தொடர்பாக அப்துல் ரசாக் மன்னிப்பு கோரியுள்ளார்.
Abdur Razzaq’s public apology to Aishwariya Rai after Shahid Afridi urges him!#SamaaTV #Pakistan #ShahidAfridi #AbdurRazzaq #AishwariyaRai #WorldCup23 #Cricket #Cricket23 #ICCCricketWorldCup2023 #ZorKaJor@SAfridiOfficial @Mushy_online @yousaf1788 @umairbashirr @sawerapasha pic.twitter.com/dZksfgJmZZ
— SAMAA TV (@SAMAATV) November 14, 2023
மன்னிப்பு கோரினார் அப்துல் ரசாக்:
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அப்துல் ரசாக் பேசியுள்ளார். அதில், “நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் நோக்கங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது வாய் தவறியும், தவறுதலாகவும் ஐஸ்வர்யா ராயின் பெயரை நான் பயன்படுத்தி விட்டேன். இதற்காக நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நான் விரும்பவில்லை” என அப்துல் ரசாக் விளக்கமளித்துள்ளார்.
அப்துல் ரசாக் பேசியது என்ன?
நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு தொடர்பாக, அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையிலான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அப்துல் ரசாக், ”நான் கிரிக்கெட் விளையாடும்போது எங்களது கேப்டனான யூனிஸ்கானின் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் என்னை மேம்படுத்திக் கொள்வதற்கான நம்பிக்கையும், வலிமையயும் அளித்தார்கள். அதன் மூலம், பாகிஸ்தான் அணிக்காக என்னால் சிறப்பாஅக் செயல்பட முடிந்தது. ஆனால் தற்போதய சூழலில் பாகிஸ்தான் வீரர்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நம் நாட்டின் கிரிக்கெட் வாரியத்திடம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஐஸ்வர்யா ராயை மணப்பதன் மூலம் மட்டும் உங்களுக்கு நல்ல திறமைய்வாய்ந்த குழந்தை பிறந்துவிடும் என நம்பினால் அது ஒருபோதும் நிகழாது” என பேசினார். இந்த பேச்சுக்கு பாகிஸ்தானை சேர்ந்த வாசிம் அக்ரம் உள்ளிட்ட சில வீரர்களே கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோருவதாக அப்துல் ரசாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.