டி20 தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: மண்ணைக் கவ்வியது ஜிம்பாப்வே
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது. அந்நிய மண்ணில் நெருக்கடிகளுக்கு இடையேயும் ஆப்கானிஸ்தான் அணி எளிதான வெற்றியை வசப்படுத்தியது.
தொடர்ந்து இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள்ல் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (ஜூன் 14) மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய ஆப்கன் அணி 20 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தது. முகமது நபி அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டனாக அவர் அணிக்கு தோள் கொடுத்தார். 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் களத்தில் நூர் அகமதும், நிஜாத் மசூதும் இருந்தனர். அப்போது ஆட்டம் முடிந்தது. 125 ரன்கள் எடுத்திருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் ரியான் பர்ல், சிக்கந்தர் ராசா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். டெண்டாய் சத்தாரா, டொனால்ட் டிரிபானோ, லூக் ஜாங்வே, அய்ன்ஸ்லி லோவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
ஆறுதல் வெற்றியும் பறிபோனது:
126 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே ஆட ஆரம்பித்தது. முதல் இரண்டு ஆட்டங்களிலேயே ஜிம்பாப்வே வீரர்களின் திறனை அளந்து வைத்திருந்த ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஆரம்பம் முதலே டஃப் கொடுக்க ஆரம்பித்தனர். ஜிம்பாப்வே அணி கேப்டன் க்ரெய்க் எர்வைன் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். எல்பிடபிள்யு முறையில் அவர் அவுட் ஆனார்.
அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வெஸ்லி மதேவேர் 2 பவுண்டரிகளை விளாசி 14 ரன்கள் வரை தாக்குப்பிடித்தார். ஷராபுதீன் பந்து வீச்சில் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப முயற்சிக்க அது நூர் முகமதுவின் கைகளில் லாவகமாக அமர்ந்து கொண்டது. கொஞ்சம் நம்பிக்கை அளித்துவந்த வெஸ்லியும் பேக் டூ தி பெவிலியன் என்று போய் சேர்ந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் கூட சொல்லிக் கொள்ளும்படி ரன் சேர்க்கவில்லை.
இன்னசண்ட் கயா 12 ரன்கள் எடுத்தார். டாடிவானாஷே 11 ரன்கள் எடுத்தார். அணியில் அதிகபட்சமாக ரியான் பர்ல் 15 ரன்கள் எடுத்தார். கரை சேர்ப்பார் என நினைத்த போது ஃபசல்ஹக் பந்துவீச்சில் அவுட் ஆனார். அந்த காட் அண்ட் பவுல் காட்சி அரங்கத்தை அதிர வைத்தது. இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே ஜிம்பாப்வே அணி எடுத்தது. ஆரம்பத்திலிருந்தே குறைந்த ரன்களை டிஃபண்ட் செய்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 3க்கு 3 என்ற வீதத்தில் இந்த தொடரை வென்று வாகை சூடியுள்ளது.