Abishek Sharma: 13 ரன்னில் மிஸ்.. கோலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட அபிஷேக்!
ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பை 13 ரன்னில் அபிஷேக் சர்மா தவறவிட்டார்.

இந்திய அணியின் வளர்ந்து வரும் வீரர் அபிஷேக் சர்மா. ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய அபாரமான அதிரடி பேட்டிங் மூலமாக இந்திய அணியில் இடம்பிடித்தவர். தனது அபாரமான பேட்டிங் மூலமாக இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக இடம்பிடித்து வருகிறார்.
கோலி சாதனையை நெருங்கிய அபிஷேக்:
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இன்று அகமதாபாத்தில் நடக்கும் டி20 போட்டியில் 21 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த போட்டியில் அவர் புதிய வரலாறு படைக்கும் சாதனையை 13 ரன்களில் தவறவிட்டார். இந்திய அணிக்காக ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை 13 ரன்னில் இவர் தவறவிட்டார்.
இந்த சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி 31 ஆட்டங்களில் 1614 ரன்களுடன் தன்வசம் வைத்துள்ளார். விராட் கோலி இந்த சாதனையை 2016ம் ஆண்டில் படைத்தார். அபிஷேக் சர்மா 2015ம் ஆண்டில் 40 டி20 போட்டிகளில் ஆடி 1602 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பாண்டில் இந்திய அணி இதற்கு பிறகு டி20 போட்டிகளில் ஆடாது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்கால நட்சத்திரம்:
ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலே உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என 3 வடிவத்திலும் ஆகச்சிறந்த வீரராக உலா வந்தவர் விராட் கோலி. விராட் கோலி இதுவரை 125 டி20 போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 188 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 122 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 1 சதம், 38 அரைசதங்கள் அடங்கும்.
25 வயதான அபிஷேக் சர்மா 33 டி20 போட்டிகளில் ஆடி 32 இன்னிங்சில் ஆடி 1115 ரன்கள் எடுத்துள்ளார்.2 சதங்கள் 6 அரைசதங்கள் விளாசியுள்ளார். இந்திய அணிக்காக தொடர்ந்து அதிரடியாகவும் அபாரமாகவும் ஆடி வரும் அபிஷேக் சர்மா இந்திய அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்து வருகிறார்.
டி20 உலகக்கோப்பை:
13 ரன்களில் விராட் கோலி சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அபிஷேக் சர்மா தவறவிட்டாலும் அடுத்தாண்டு நடக்கும் டி20 போட்டியில் இந்திய அணியின் முக்கியமான நட்சத்திரமாக அவர் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய டி20 அணியில் தொடக்க வீரர்களுக்கான சவால் அதிகளவில் உள்ளது. ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மன்கில், இஷான் கிஷன், சாம்சன், ருதுராஜ் என பெரிய பட்டாளமே தொடக்க வீரராக களமிறங்க போட்டி இருந்து வருகிறது.




















