(Source: ECI/ABP News/ABP Majha)
AB De Villiers: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதை முதலில் மாற்றுங்க.. டிவிலியர்ஸ் வைத்த கோரிக்கை...!
நியூசிலாந்து அணிக்கு ஒருபக்கம் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நடுவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த அனுமதிக்கவில்லை.
பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வரும் நியூசிலாந்து அணி அந்த நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவான நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வந்தது.
பாக் - நியூசி. ஆட்டம் டிரா:
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டுமே கைவசம் வைத்திருந்து ஆட்டத்தை டிரா செய்தது. இதனால், டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை நியூசிலாந்து அணி இழந்தது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் – சவுத் ஷகீல் ஜோடி இணைந்து ஆட்டத்தை மாற்றியது. 85 ரன்களில் சேர்ந்த ஜோடி 203 ரன்களில்தான் பிரிந்தது. விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த சவுத் ஷகீல் 146 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
சர்ப்ராஸ் அபார சதம்:
அடுத்து வந்த அகா சல்மானும் சர்ப்ராசுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். அவர் 40 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நங்கூரம்போல களத்தில் நின்ற சர்ப்ராஸ் அகமது சதமடித்து அசத்தினார். ஹசன் அலி 5 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ப்ராஸ் அகமது ஆட்டமிழந்தார். 176 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டம் முடிய 4 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் சர்ப்ராஸ் அவுட்டானதால் மீதமிருந்த 1 விக்கெட்டையும் வீழ்த்தினால் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. 4 ஓவர்களை கடத்தினால் பாகிஸ்தான் போட்டியை டிரா செய்யும் வாய்ப்பு இருந்தது.
அதேபோல், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 3 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் சூரியன் மறைந்ததால் வெளிச்சம் மங்கியது. இதையடுத்து, போட்டியை முடித்து கொள்ளுமாற்று நடுவர்கள் அறிவுறுத்தினர்.
பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி டிரா செய்தது.
நியூசிலாந்து அணிக்கு ஒருபக்கம் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நடுவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசினர். இதை பயன்படுத்தி கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் சிக்ஸர், பவுண்டரிகளை அடித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பாதையை உருவாக்கினர். அப்போதுதான் 3 மிச்சம் இருந்தநிலையில் போதிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் போட்டியை நடுவர்கள் முடித்தனர்.
ஏபி டிவிலியர்ஸ் கருத்து:
இதுகுறித்து முன்னாள் தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் ஏபி டிவிலியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த கிரிக்கெட் விதிகள் நீண்ட காலமாகவே குறையாகவே இருந்து வருகிறது. பந்து வீசும் அணி போதிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் நடுவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தவிடாமல், சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பந்துவீச அனுமதிக்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் வெறும் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து மட்டுமே போட்டியை முடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்.
வெளிச்சம் இல்லாத நேரத்திலும் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் முறையை கொண்டு வர வேண்டும். வேகப்பந்துவீச்சை பயன்படுத்து பந்து வீசி இருந்தால் போட்டி எப்போதோ முடிந்து இருக்கும். பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றிபெற 5 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களே உள்ளது என்று வைத்து கொள்வோம். அப்போதாவது பந்து வீசும் அணி வேக பந்துவீச்சார்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இது ஒரு தரப்புக்கு சாதகமான போட்டியாக மாறிவிடும்” என்று தெரிவித்தார்.