மேலும் அறிய

4 ஆண்டுகள்...பல வெற்றிகள்... ஐசிசி கோப்பை மட்டும் மிஸ்ஸிங்: ரவி சாஸ்திரியும் டீம் இந்தியாவும்! விரிவான தகவல்!

ரவி சாஸ்திரியின் பயிற்சி காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி எவ்வாறு செயல்பட்டது? விரிவான தரவுகளுடன் கூடிய ஆய்வு இதோ:

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தன்னுடைய பதவிக்காலத்தை டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு செய்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. எனினும் கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் தன்னுடைய நான்கு ஆண்டுகால இந்திய பயிற்சியாளர் பணியை ரவி சாஸ்திரி நிறைவு செய்தார். 

இந்தச் சூழலில் ரவி சாஸ்திரியின் பயிற்சி காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி எவ்வாறு செயல்பட்டது? 

இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டியன் விலகினார். அதன்பின்பு 2011-2015ஆம் ஆண்டு வரை ஜிம்பாவேவைச் சேர்ந்த டன்கன் ஃபிளட்சர் பயிற்சியாளராக இருந்தார். 2014ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து தொடரில் படு மோசமான தோல்வியை சந்தித்தது. அப்போது இந்திய அணியின் இயக்குநராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டுஅவர் அப்பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒராண்டு அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார். 

ரவி சாஸ்திரி இந்திய பயிற்சியாளராக செயல்பாடு(2017-2021):

தொடர்கள் போட்டிகள் வெற்றி தோல்வி பிற முடிவு வெற்றி %
டெஸ்ட் 43 25 13 5 58.1%
ஒருநாள் 76 51 22 3 67.1%
டி20  65 45 18 2 69.2%

அனில் கும்ப்ளே மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2017ஆம் ஆண்டு கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பின் இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று பலரும் கருதினர். அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கபட்டார். 2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு ரவி சாஸ்திரி இந்திய பயிற்சியாளர் பதவியை தொடங்கினார். 

4 ஆண்டுகள்...பல வெற்றிகள்... ஐசிசி கோப்பை மட்டும் மிஸ்ஸிங்: ரவி சாஸ்திரியும் டீம் இந்தியாவும்! விரிவான தகவல்!

டெஸ்ட் அணி: 

பயிற்சியாளர்

பதவிக்காலம்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

பிற முடிவுகள்

வெற்றி %

ஜான் ரைட்

2000-05

51

20

15

16

39.2%

கிரேக் சேப்பால்

2005-07

18

7

4

7

38.9%

கேரி கிறிஸ்டியன்

2008-11

33

16

6

11

48.5%

டன்கன் ஃபிளேட்சர்

2011-15

39

13

17

9

33.3%

அனில் கும்ப்ளே

2016-17

17

12

1

4

70.6%

ரவி சாஸ்திரி

2017-21

43

25

13

5

58.1%

அவர் முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைவிட டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக கவனம் செலுத்தி வந்ததாக தெரிந்தது. ஏன்னென்றால் அவருடைய பயிற்சி காலத்தில் இந்திய அணி ஒரு பலம் வாய்ந்த டெஸ்ட் அணியாக உருவெடுத்தது. குறிப்பாக இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாட தொடங்கியது. 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியின் சற்று சிறப்பாக விளையாட தொடங்கியது. அதற்கு முக்கியமாக ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி ஒரு நல்ல வேகப்பந்துவீச்சு அணியாக உருவாகியது. பரத் அருண் மற்றும் ரவிசாஸ்திரி இந்திய அணியை நல்ல வேகப்பந்து வீச்சு அணியாக கட்டமைத்தனர். 

2018ல் முதல் இந்திய வேகப்பந்து வீச்சு: 

பும்ரா,இஷாந்த்,ஷமி இணைந்து எடுத்த விக்கெட்கள்:

டெஸ்ட் தொடர்  மூவர் எடுத்த விக்கெட்கள் 
தென்னாப்பிரிக்கா 2018 37
இங்கிலாந்து 2018 48
ஆஸ்திரேலியா 2018-19 48
நியூசிலாந்து 2020 16

இதற்கு முக்கிய காரணம் ஜஸ்பிரீத் பும்ரா என்று சொன்னால் அது மிகையாகாது. 2018ல் டெஸ்ட் போட்டிகளில் பும்ரா அறிமுகமாகினார். அப்போது முதல் தற்போது வரை 24 போட்டிகளில் பங்கேற்று உள்ள பும்ரா 101 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில் குறிப்பாக ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மட்டும் இவர் 88 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

2018 ஆஸ்திரேலிய தொடர் மற்றும் 2020-21 ஆஸ்திரேலிய தொடர்களில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அதிலும் குறிப்பாக 2020-21 தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதன்பின்னர் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. குறிப்பாக 2020 ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணி கிட்டதட்ட 42 மாதங்கள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒருநள் அணி:

2000 ஆம் ஆண்டு முதல் இந்திய பயிற்சியாளர்களின் ஒருநாள் போட்டி ரெக்கார்டு:

பயிற்சியாளர்

பதவிக்காலம்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

பிற முடிவுகள்

வெற்றி %

ஜான் ரைட்

2000-05

130

68

56

6

52.3%

கிரேக் சேப்பால்

2005-07

62

32

27

3

51.6%

கேரி கிறிஸ்டியன்

2008-11

91

57

29

5

62.6%

டன்கன் ஃபிளேட்சர்

2011-15

107

64

35

8

59.8%

அனில் கும்ப்ளே

2016-17

16

11

5

0

68.8%

ரவி சாஸ்திரி

2017-21

76

51

22

3

67.1%

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் ரவி சாஸ்திரி சில முக்கிய மாற்றங்களை செய்தார். அதாவது இரண்டு ரிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணிக்குள் கொண்டு வந்தார். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய அணியில் பெரும் பங்கு வகிக்க தொடங்கினர். இந்த இரண்டு பேரின் சுழல் கூட்டணி இந்திய அணி ஆஸ்திரேலியா,நியூசிலாந்து,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒருநாள் போட்டிகளை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. எனினும் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 

4 ஆண்டுகள்...பல வெற்றிகள்... ஐசிசி கோப்பை மட்டும் மிஸ்ஸிங்: ரவி சாஸ்திரியும் டீம் இந்தியாவும்! விரிவான தகவல்!

டி20 அணி:

ஒருநாள் போட்டியை போல் டி20 போட்டிகளிலும் ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அவருடைய பயிற்சி காலத்தில் 2017 இலங்கை டி20 தொடர் தொடங்கி, நிதாஸ் டிராபி 2018, இங்கிலாந்து (2018),வெஸ்ட் இண்டீஸ்(2019), நியூசிலாந்து(2020),ஆஸ்திரேலியா(2020) என தொடர் சென்ற இடங்கள் அனைத்திலும் டி20 தொடர்களில் வெற்றியை கண்டது. ஆக மொத்தம் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரவி சாஸ்திரி பயிற்சி காலத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த போட்டிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐசிசி தொடர்கள்:

ரவிசாஸ்திரி பதவிக்காலத்தில் இந்திய அணி முதலில் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்றது. அதில் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியது. அதிலும் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்ல தவறியது. கடைசியாக 2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. அதில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி மேலும் ஒரு பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்திய அணிக்கு ஐசிசி  கோப்பையை வென்று தரவில்லை என்றாலும் ரவி சாஸ்திரி நான்கு ஆண்டுகளில் இந்திய அணியை ஒரு சிறப்பான அணியாக கட்டமைத்தார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

மேலும் படிக்க: 'வீசிய 4 ஓவர்களும் மெய்டன்' உலக சாதனை படைத்த விதர்பா வீரர்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget