Ind vs Sa t20: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி 20 போட்டி... டாஸ் போடுவதில் தாமதம்... காரணம் என்ன?
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா:
இந்திய அணி சமீபத்தில் உள்நாட்டில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குஎதிராக நடைபெற்ற டி 20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க தொடரை சந்திக்கிறது.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள், ஆஸ்திரேலிய அணியில் வலுவான பந்து வீச்சாளர்கள் இல்லாதது, பேட்டிங்கில் பெரியஅளவிலான நட்சத்திர வீரர்கள் பங்கேற்காதது ஆகியவை இந்திய அணிக்கு சற்று சாதகமான விஷயங்களாக இருந்தன. ஆனால் தென்னாப்பிரிக்க தொடர் இளம்வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணிக்கு கடும் சவால்தரக்கூடும்.
சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் வலுசேர்க்கக்கூடும். தொடக்க வீரராக சுப்மன் கில்லுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கக்கூடும். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.
3-வது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர், 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5-வது இடத்தில் ரிங்கு சிங் களமிறங்கக்கூடும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெறுவதில் இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவக்கூடும். இதில் பினிஷர் பணியை ஜிதேஷ் சிறப்பாக மேற்கொள்ளக்கூடியவர் என்பதால் அவரே விளையாடும் லெவனில் இடம் பெற அதிகவாய்ப்புகள் உள்ளன. 7-வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா களமிறங்குவார் என கூறப்படுகிறது.
டாஸ் போடுவதில் தாமதம்:
இச்சூழலில், இன்று (டிசம்பர் 10) நடைபெற உள்ள முதல் டி 20 போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக தற்போது டாஸ் போடுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நின்ற பின் டாஸ் போடப்படும் என்று தெரிகிறது.