Commonwealth Games 2022: காமன்வெல்த் மகளிர் ஹாக்கி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா போராடி தோல்வி..
இங்கிலாந்து அணிக்கு எதிரான குரூப் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதலில் கானா அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இன்று இந்திய மகளிர் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் 3வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து அணி கோல் அடித்தது. இதன்காரணமாக முதல் கால்பாதியின் முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்று இருந்தது. இரண்டாவது கால்பாதியில் இந்திய அணி கோல் அடிக்க எடுத்த முயற்சி எதுவும் கை கொடுக்கவில்லை. அத்துடன் பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்திய மகளிர் சரியாக பயன்படுத்தவில்லை. முதல் பாதியின் முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்று இருந்தது.
Just in: Women's Hockey:
— India_AllSports (@India_AllSports) August 2, 2022
India go down to WR 5 England 1-3 in their 3rd Group match.
👉 India at 3rd spot in Group A with 6 points (2 wins & a loss).
👉 Next India will take on WR 15 Canada in their final Group match tomorrow. #CWG2022 #CWG2022India pic.twitter.com/YNKMYBpVVv
மூன்றாவது கால்பாதியில் 40நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை டீசா ஹாவார்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது. அடுத்து நான்காவது மற்றும் கடைசி கால் பாதியில் 53 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து அணியின் மார்ட்டின் மேலும் ஒரு கோலை அடித்தார். இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்திய வந்தனா கடாரியா இந்தியாவிற்கு ஆறுதல் கோலை அடித்தார். இதனால் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்திய மகளிர் அணி அடுத்து கனடாவை எதிர்த்து விளையாட உள்ளது. இந்திய அணி தற்போது வரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்