CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்தத்தில் பதக்கத்தை உறுதி செய்து அசத்திய சாக்ஷி, பஜ்ரங்
காமன்வெல்த் மல்யுத்ததில் சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
காமன்வெல்த் மல்யுத்த போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் மகளிருக்கான 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அரையிறுதியில் இவர் கேமரூன் வீராங்கனை எமிலியானவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாக்ஷி மாலிக் 10-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜரங் புனியா பங்கேற்றார். இவர் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து ஜார்ஜ் ராமை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா சிறப்பாக செயல்பட்டு 10-0 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இவரும் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
Commonwealth games : Wrestling
— Sports India (@SportsIndia3) August 5, 2022
Medal matched timing (1st - 9:30pm)
9:55 Anshu : W 57kg final (3rd bout)
10:20 @BajrangPunia ; 65kg Final (6th)
10:55 Sakshi : W 62kg Final (9th)
11:30 Deepak : 86kg Final (12th)
11:45 @DivyaWrestler ;W 67kg 🥉 (13th)
12:45 Mohit : 125kg 🥉 (17th) pic.twitter.com/aHDp7effsL
முன்னதாக ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மோஹித் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இவர் அரையிறுதிப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாயை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் கனடா வீரர் அமரவீர் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் 12-2 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் மோஹித் வெண்கலப் பதக்க போட்டியில் சண்டை செய்ய உள்ளார். அதேபோல் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்கரன் காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இவர் ரெபிசார்ஜ் ரவுண்டில் வெற்றி பெற்று தற்போது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்