CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 7-வது பதக்கத்தை உறுதி செய்த நவீன்
காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவின் நவீன் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் ஆடவருக்கான 74 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் இவர் இங்கிலாந்து நாட்டின் சார்லியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் சிறப்பாக செயல்பட்டார்.
இந்தப் போட்டியில் நவீன் இங்கிலாந்து வீரர் சார்லி பவுலிங்கை சிறப்பாக கையாண்டார். இவர் வேகமாக 8 புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் இங்கிலாந்து வீரர் ஒரு புள்ளியை பெற்றார். முதல் சுற்றின் முடிவில் இவர் 10 புள்ளிகள் பெற்று இருந்தார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இவர் சிறப்பாக செயல்பட்டார். இதன்மூலம் 11-1 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்தியாவிற்கு காமன்வெல்த் 2022 மல்யுத்தத்தில் 7வது பதக்கத்தை நவீன் உறுதி செய்தார். இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் இவர் பங்கேற்க உள்ளார்.
#Wrestling Update 🚨
— SAI Media (@Media_SAI) August 6, 2022
Naveen (74kg FS) wins his Semi-Final bout by Technical Superiority (12-1) and defeats England's Charlie Bowling 🤼
He will play for GOLD 👍
All the best Champ 🤟#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/74EfY5KzUr
இன்று மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா சிஹாக் பங்கேற்றார். இவர் முதல் இரண்டு போட்டிகள் சிறப்பாக வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இவர் கனடாவின் ஸ்டாஸியோவை எதிர்த்து விளையாடினார்.
இந்தப் போட்டியில் முதல் சுற்றில் கனடா வீராங்கனை ஸ்டாஸியோ சிறப்பாக விளையாடி 4 புள்ளிகளை எடுத்தார். அடுத்து இரண்டாவது சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடா வீராங்கனை மேலும் 2 புள்ளிகளை எடுத்தார். இதன்மூலம் 6-0 என்ற கணக்கில் கனடா வீராங்கனை ஸ்டாஸியோ போட்டியை வென்றார். அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கத்திற்காக சண்டையிட உள்ளார். இன்று இரவு வெண்கலப் பதக்க போட்டி நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்