CWG 2022 Day 4 Schedule: காமன்வெல்த் போட்டிகளில் இன்று களமிறங்க உள்ள வீரர் வீராங்கனைகள் யார் யார்?
Commonwealth Games 2022 Day 4 India Schedule: காமன்வெல்த் போட்டிகளில் இன்று களமிறங்க உள்ள வீரர் வீராங்கனைகள் யார் யார்?
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சிறப்பாக தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளில் இந்தியாவிற்கு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்திருந்தது. இந்தச் சூழலில் 3வது நாளான நேற்று இந்திய அணிக்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. மொத்தமாக இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் 4வது நாளான இன்று காமன்வெல்த் போட்டிகளில் களமிறங்க உள்ள இந்திய வீரர் வீராங்கனைகளை யார் யார்?
ஆடவர் ஹாக்கி: இந்தியா vs இங்கிலாந்து (இரவு 8.30 மணிக்கு)
டேபிள் டென்னிஸ்: ஆடவர் அணி vs நைஜீரியா(இரவு 11.30 மணிக்கு)
பேட்மிண்டன்: கலப்பு குழு அணி vs சிங்கப்பூர்(இரவு 10 மணிக்கு)
பளுதூக்குதல்: ஆடவர் 81 கிலோ எடைப்பிரிவு: அஜய் சிங் (மதியம் 2 மணிக்கு)
மகளிர் 71 கிலோ எடைப்பிரிவு: ஹர்ஜிந்தர் சிங் (இரவு 11.00 மணிக்கு)
Day 4️⃣ at CWG @birminghamcg22
— SAI Media (@Media_SAI) August 1, 2022
Take a 👀 at #B2022 events scheduled for 1st August
Catch #TeamIndia🇮🇳 in action on @ddsportschannel & @SonyLIV and don’t forget to send in your #Cheer4India messages below#IndiaTaiyaarHai #India4CWG2022 pic.twitter.com/UDwvKOXJI9
ஸ்குவாஷ்: மகளிர் ஒற்றையர் பிளேட் காலிறுதி: சுன்யானா vsசனித்மா சின்லே(மாலை 4.45 மணிக்கு)
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி: ஜோஷ்னா vsஹோலே நாவ்டன் (மாலை 6 மணிக்கு)
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி: சவுரவ் கோஷால் vsகிரேக் லாபன்(மாலை 6.45 மணிக்கு)
ஜூடோ: மகளிர்48 கிலோ எடைப்பிரிவு: சுஷீலா தேவி vs ஹரியட் போன்ஃபேஸ்(மதியம் 2.30 மணிக்கு)
மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு: சுச்சிகா தாரியல் vs ரிதா கபிண்டா(மதியம் 2.30 மணிக்கு)
ஆடவர் 66 கிலோ எடைப்பிரிவு: ஜஸ்லீன் சிங் vs மேக்ஸ்சென்ஸ் குயுகோலா(மதியம் 2.30 மணிக்கு)
ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவு: விஜய் குமார் vs வின்ஸ்லே (மாலை 2.30 மணிக்கு)
குத்துச்சண்டை: ஆடவர் 51 கிலோ எடைப்பிரிவு: அமித் பங்கால் vs நாம்ரி பெர்ரி (மாலை 4.45 மணிக்கு)
ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு: முகமது ஹூசாமுதுதீன் vs முகமது சலீம் ஹூசைன் (மாலை 6.00 மணிக்கு)
ஆடவர் 80 கிலோ எடைப்பிரிவு: ஆஷிஷ் குமார் vs ட்ராவிஸ் (அதிகாலை 1.00 மணிக்கு)
நீச்சல்: ஆடவர் 100 மீட்டர் பட்டர்ஃபிளை: சஜன் பிரகாஷ் (மதியம் 3.51 மணிக்கு)
ஆடவர் 50 மீட்டர் பேக்ஸ்டோர்க்: ஸ்ரீஹரி நட்ராஜ்(அதிகாலை 1.07 மணிக்கு)
பாரா நீச்சல்: ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்7- நிரஞ்சன் முகுந்த்(அதிகாலை 12.46 மணிக்கு)
ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்7- சுயஸ் ஜாதவ்(அதிகாலை 12.46 மணிக்கு)
லான் பவுல்ஸ்: மகளிர் 4s இந்திய அணி (இரவு 7.30 மணிக்கு)
ஜிம்னாஸ்டிக்ஸ்: மகளிர் வால்ட் பிரிவு: பிரணீதி நாயக் (மாலை 6.45 மணிக்கு)
மகளிர் அன்ஈவன் பார்ஸ்: ருதுஜா நட்ராஜ் (இரவு 8.15 மணிக்கு)