CWG 2022 Athletics: காமன்வெல்த் தடகளம்: ஆடவர் 4*400 ரிலேவில் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி
காமன்வெல்த் தடகளத்தில் ஆடவருக்கான 4*400 மீட்டர் ரிலே பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
காமன்வெல்த் தடகள போட்டியில் ஆடவர் 4*400 மீட்டர் ரிலே பிரிவு தகுதிச் சுற்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் முகமது அனாஸ் யஹியா, நிர்மல் டாம், முகமது அஜ்மல் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்றது. தகுதிச் சுற்றில் இந்திய அணி இரண்டாவது ஹீட்ஸில் களமிறங்கியது. தகுதிச் சுற்றில் ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.
இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது ஹீட்ஸில் பந்தய தூரத்தை 3.06.97 என்ற நேரத்தில் கடந்தது. அத்துடன் இந்த ஹீட்ஸில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதன்மூலம் இந்திய ஆடவர் அணி 4*400 ரிலே பிரிவில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்தப் பிரிவின் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி நடைபெறும்.
Commonwealth games : Athletics
— Sports India (@SportsIndia3) August 5, 2022
Indian 4×400 men team make it to final as they finish 2nd in their respective Heat with timing of 3.06.97 (NR - 3:00.25)
Team - Muhammed Anas , Noah Nirmal Tom , Amoj Jacob & Muhammed Variyathodi @afiindia
Final lined up for 7th pic.twitter.com/kC2mzBVOki
முன்னதாக இன்று நடைபெற்ற மகளிர் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாரார்ஜி பங்கேற்றார். இவர் பந்தய தூரத்தை 13.18 விநாடிகளில் கடந்தார். எனினும் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். மொத்தமாக அவர் 10வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
அதேபோல் மகளிர் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அன்சி சோஜன் பங்கேற்றார். இவர் தன்னுடைய இரண்டாவது முயற்சியில் 6.25 மீட்டர் நீளம் தாண்டினார். அத்துடன் தகுதிச் சுற்றில் மொத்தமாக 13வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்