Commonwealth Fencing 2022 : காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி : தங்கம் வென்று அசத்தினார் சென்னை வீராங்கனை பவானிதேவி..!
காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார்.
காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லோவை 15 - 10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
➡️ @IamBhavaniDevi has won the Commonwealth Fencing Championship 2022, London in Senior Women's Sabre Individual category
— ishan (@imishan12) August 9, 2022
She won 15-10 to take the 🥇 Medal #BhavaniDevi @Media_SAI #Fencing #India 🇮🇳 pic.twitter.com/ofa45F8UAZ
இந்திய ஏஸ் ஃபென்சர் பவானி தேவி புதன்கிழமை காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் 2022 இல் மூத்த பெண்கள் சேபர் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். லண்டனில் நடந்த போட்டியில் தேவி 15-10 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார். 2019 ஆம் ஆண்டு இதே போட்டியில் தங்கம் வென்று பவானி தேவி பட்டத்தை வென்றது இது இரண்டாவது முறையாகும். காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் 2022 ஆகஸ்ட் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை தொடங்கியது, இறுதி சுற்றுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் 2022 இல் தங்கம் வென்றார் பவானி தேவி :
பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பின் தொடக்கச் சுற்றில் அலெக்ஸாண்ட்ரா டேவிட்டை எதிர்கொண்டு 15-6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல், அரையிறுதிச் சுற்றில் ஸ்காட்லாந்தின் லூசி ஹையாமை எதிர்கொண்டு 15-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியாவின் வெரோனிகா வாசிலேவாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மோதி, வெற்றிப்பெற்று இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றார்.
யார் இந்த பவானிதேவி..?
சென்னையை சேர்ந்த பவானிதேவி 2020 ஆம் ஆண்டு ஹங்கேரியில் நடந்த ஃபென்சிங் உலகக் கோப்பையின் காலிறுதியில் வெற்றிபெற்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் தகுதி பெற்ற ஒரே இந்திய ஃபென்சர் என்ற பெருமையையும் பவானிதேவி வசமானது.
- 2007 இல் துருக்கியில் நடந்த தனது போட்டிக்கு மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்தபோது கருப்பு அட்டையுடன் (தகுதியின்மை) தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கினார்.
- 2009 காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப், அவரது முதல் சர்வதேச பதக்கம்.
- பவானி தேவி ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.
- ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் 2019 பதிப்பில் தனது வெற்றியைப் பதிவு செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்