(Source: ECI/ABP News/ABP Majha)
Australian Open 2023: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதி போட்டியில் 6-3, 7-6, 7-6 என்ற கணக்கில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
Novak Djokovic beats Stefanos Tsitsipas to win his 10th Australian Open title
— ANI (@ANI) January 29, 2023
((Photo source: Australian Open) pic.twitter.com/KYLIzy20qn
இறுதி போட்டி:
ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டியானது, ஆஸ்திரேலிய மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச் மற்றும் சிட்சிபாஸ் மோதினர். இன்றைய போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றால் ரஃபேல் நடாலின் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்குச் சமமாக ஜோக்கோவிச்சும் இருப்பார் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் செட் கணக்கில் 6-3 என்ற கணக்கில் சிட்சிபாஸ் முன்னிலை வகித்தார்.
இரண்டாவது செட் கணக்கில், 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் சமன் செய்தார். மூன்றாவது செட் கணக்கில் 7-6 என்ற கணக்கில் எடுத்து, இரண்டு சுற்றுகள் முன்னிலையை பெற்று வெற்றி பெற்றார் ஜோகோவிச்.
10வது ஆஸ்திரேலிய ஓபன் :
இதன் மூலம் நோவக் ஜோகோவிச் தனது 10வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் நடாலின் 22 கிராண்ட்ஸ்லாம் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார்.
View this post on Instagram
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி ரபேல் நடாலின் கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்தார் நோவக் ஜோகோவிச்.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 22 பட்டங்களுடன் நடாலுடன் இணைந்தார் ஜோகோவிச் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.